பொது செய்தி

தமிழ்நாடு

சிவகங்கையில் தொடர் மழை: கண்மாய்களுக்கு நீர் வரத்து

Added : அக் 01, 2021
Share
Advertisement
சிவகங்கை-சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கண்மாய்களுக்கு நீர் வரத்து தொடங்கியதால் விவசாயிகள் மகிழ்ந்தனர்.சிவகங்கை மாவட்டத்தில் 4861 கண்மாய்கள்,4598 ஊரணிகள் உள்ளன. இதில் 445 கிராம ஊராட்சிகளில் சராசரியாக கண்மாய், ஊரணிகள் குறைந்த பட்சம் 8 கண்மாய், ஊரணிகள் உள்ளன.இவை அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய சங்கிலி தொடர்போல் அமைந்துள்ளன. மாவட்டத்தின் சராசரி

சிவகங்கை-சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கண்மாய்களுக்கு நீர் வரத்து தொடங்கியதால் விவசாயிகள் மகிழ்ந்தனர்.சிவகங்கை மாவட்டத்தில் 4861 கண்மாய்கள்,4598 ஊரணிகள் உள்ளன. இதில் 445 கிராம ஊராட்சிகளில் சராசரியாக கண்மாய், ஊரணிகள் குறைந்த பட்சம் 8 கண்மாய், ஊரணிகள் உள்ளன.இவை அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய சங்கிலி தொடர்போல் அமைந்துள்ளன. மாவட்டத்தின் சராசரி மழையளவு ஆண்டுக்கு 906.4 மி.மீ., ஆகும். வடகிழக்கு பருவமழை அக்., மாதம் தொடங்கும்.அதற்கு முன்னதாகவே சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து கடந்த 10 நாட்களாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருவதால் நிலத்தடியில் ஈரம் ஏற்பட்டு ஊற்றுக்கள் தென்பட தொடங்கியுள்ளன. இவைகள் அனைத்தும் கண்மாய் பகுதிகளுக்கு நீர் வரத்தினை ஏற்படுத்தியுள்ளன. இதன் காரணமாக கண்மாய்களுக்கு நீர்வரத்து தொடங்கியதால் நெல் விதைப்பு பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். சிவகங்கையில் மட்டும் நேற்று முன்தினம் 40 மி.மீ., மழை பதிவானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X