பொது செய்தி

தமிழ்நாடு

வேட்டங்குடி சரணாலயத்தில் பறவைகள்

Added : அக் 01, 2021
Share
Advertisement
திருப்புத்துார்-திருப்புத்துார் அருகே வேட்டங்குடிப்பட்டி பறவைகள் சரணாலயம் கொள்ளுக்குடிப்பட்டி கண்மாயில் கடந்த ஆண்டு முழுவதும் பறவைகள் தொடர்ந்து தங்கியிருந்தது சரணாலய வரலாற்றில் புதிய அனுபவமாகும்.திருப்புத்துாரிலிருந்து மதுரை செல்லும் ரோட்டில் 15 கி.மீ.தொலைவில் உள்ளது வேட்டங்குடி பறவைகள் சரணாலயம். இங்குள் கொள்ளுக்குடிப்பட்டி கண்மாயில் தான் பறவைகள் அதிகமாக

திருப்புத்துார்-திருப்புத்துார் அருகே வேட்டங்குடிப்பட்டி பறவைகள் சரணாலயம் கொள்ளுக்குடிப்பட்டி கண்மாயில் கடந்த ஆண்டு முழுவதும் பறவைகள் தொடர்ந்து தங்கியிருந்தது சரணாலய வரலாற்றில் புதிய அனுபவமாகும்.திருப்புத்துாரிலிருந்து மதுரை செல்லும் ரோட்டில் 15 கி.மீ.தொலைவில் உள்ளது வேட்டங்குடி பறவைகள் சரணாலயம். இங்குள் கொள்ளுக்குடிப்பட்டி கண்மாயில் தான் பறவைகள் அதிகமாக தங்கி செல்லும்.கொக்கு, நாரை, வாத்து இனங்களை சேர்ந்த 22 வகை பறவைகள் வருகின்றன. வழக்கமாக ஆகஸ்ட் இறுதியில் துவங்கி மழை காலம் துவங்கியவுடன் அதிகமாகவும் குளிர் பிரதேசங்களிலிருந்து 'வலசை போதல்' ஆக வரும். இந்த பறவைகள் கண்மாயில் உள்ள மரங்களில் தங்கி இனப்பெருக்கம் செய்யும்.கோடை காலத்தில் தங்கள் நாடுகளுக்கு திரும்பி விடும். ஆனால் கடந்த ஆண்டு ஜூலையில் குடியேறிய பறவைகள் செப்டம்பர் வரையில தங்கியுள்ளன. இதனால் கடந்த 14 மாதங்களாக 2 ஆயிரம் பறவைகள் தொடர்ந்து காணப்பட்டன.கருப்பு அரிவாள் மூக்கன், நத்தை கொத்தி நாரை, நைட் ெஹரான், கொக்குகள் அதிகமாக காணப்பட்டன. சில மரங்களில் மட்டும் தங்கியிருந்தன. தற்போது மழை காணப்பட்டாலும் சீசனுக்கு வருவது போல அதிகமான பறவைகள் இதுவரை வரவில்லை.கிராமத்தினர் கூறியதாவது, பறவைகள் தொடர்ந்து தங்கியிருப்பதால் நிச்சயம் இந்த ஆண்டு நல்ல மழை இருக்கும் என்றனர்.பேராசிரியர் கோபிநாத் கூறும்போது, பருவ மழை தவறி பெய்வதால் தொடர்ந்து மழையும், கண்மாயில் நீர் இருப்பு இருந்ததாலும் பறவைகள் தொடர்ந்து தங்கி இனப்பெருக்கம் செய்து வருகின்றன. இன்னும் அக்டோபரில் பறவைகள் வரத்து அதிகரிக்கும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X