பொது செய்தி

தமிழ்நாடு

அரிவாள் பட்டறைகளில் ‛சிசிடிவி கேமரா எஸ்.பி., செந்தில்குமார் தகவல்

Added : அக் 01, 2021
Share
Advertisement
திருப்பாச்சேத்தி--அரிவாள் பட்டறைகளில் குற்றச்செயலில் ஈடுபடுவோர் ஆயுதங்கள் வாங்கி செல்வதை தடுக்க சிசிடிவி' கேமரா பொருத்தி கண்காணிக்க உள்ளோம் என சிவகங்கை எஸ்.பி., செந்தில்குமார் தெரிவித்தார்.திருப்பாச்சேத்தியில் அரிவாள் பட்டறை உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. எஸ்.பி., தலைமை வகித்தார். மானாமதுரை, திருப்புவனம், திருப்பாச்சேத்தி அரிவாள் பட்டறை

திருப்பாச்சேத்தி--அரிவாள் பட்டறைகளில் குற்றச்செயலில் ஈடுபடுவோர் ஆயுதங்கள் வாங்கி செல்வதை தடுக்க சிசிடிவி' கேமரா பொருத்தி கண்காணிக்க உள்ளோம் என சிவகங்கை எஸ்.பி., செந்தில்குமார் தெரிவித்தார்.திருப்பாச்சேத்தியில் அரிவாள் பட்டறை உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. எஸ்.பி., தலைமை வகித்தார். மானாமதுரை, திருப்புவனம், திருப்பாச்சேத்தி அரிவாள் பட்டறை உரிமையாளர்கள் பங்கேற்றனர்.எஸ்.பி., பேசியதாவது, அரிவாள் பட்டறைகளில் சட்டவிரோத ஆயுதங்களை தயாரிக்க கூடாது. குற்றப்பின்னணி உள்ளோர், சந்தேக நபர், இளைஞர்கள், வெளிமாநிலத்தவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கினால் அவர்கள் பற்றி போலீசாருக்கு தெரிவிக்கவும்.இப்பட்டறைகளை கண்காணிக்க சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் 122 ரவுடிகளை கைது செய்து 160 ஆயுதத்தை பறிமுதல் செய்துள்ளோம் என்றார். கூடுதல் எஸ்.பி., அன்பு, மானாமதுரை டி.எஸ்.பி., சுந்தரமாணிக்கம் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X