தமிழ்நாடு

அவசியம்; * கூர்மையான ஆயுதங்கள் வாங்க 'ஆதார்'...திண்டுக்கல் போலீசார் புதிய கட்டுப்பாடு

Added : அக் 01, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
திண்டுக்கல்-'குற்றச் செயல்களை தடுக்கும் விதமாக, கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் வாங்குவதற்கு இனி ஆதார் நகல் தேவை' என திண்டுக்கல் போலீசார் தெரிவித்துள்ளனர்.மாவட்டத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் விதமாக கடந்த வாரம் 44 ரவுடிகள் உட்பட 339 பேரை ஒரே நாள் இரவில் போலீசார் கூண்டோடு கைது செய்தனர். இது தவிர வாகன சோதனை, இரவு
 அவசியம்; * கூர்மையான ஆயுதங்கள் வாங்க 'ஆதார்'...திண்டுக்கல் போலீசார் புதிய கட்டுப்பாடு

திண்டுக்கல்-'குற்றச் செயல்களை தடுக்கும் விதமாக, கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் வாங்குவதற்கு இனி ஆதார் நகல் தேவை' என திண்டுக்கல் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மாவட்டத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் விதமாக கடந்த வாரம் 44 ரவுடிகள் உட்பட 339 பேரை ஒரே நாள் இரவில் போலீசார் கூண்டோடு கைது செய்தனர். இது தவிர வாகன சோதனை, இரவு ரோந்து மற்றும் சந்தேக நபர்கள் மீது கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கத்தி, அரிவாள், கூர்மையான ஆயுதங்கள் தயாரிக்கும் கொல்லர் பட்டறை, விற்பனை செய்யும் கடைகளை கண்காணிக்க திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் ஆயுதங்கள் தயாரிப்பவர்களுக்கும் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.அதன்படி, கத்தி, அரிவாள் உள்ளிட்டவை வாங்க வருவோரின் பெயர், முகவரி, அலைபேசி மற்றும் என்ன காரணங்களுக்காக ஆயுதம் வாங்குகிறார் போன்ற விபரங்களை பதிவேடு தயாரித்து தேதி வாரியாக பதிவு செய்ய வேண்டும்.

சம்பந்தப்பட்டவரின் ஆதார் நகலையும் வாங்க வேண்டும்.ஆதார் இல்லாத பட்சத்தில் ஆயுதங்களை விற்க கூடாது. பட்டறை மற்றும் விற்பனையகத்தில் கேமரா பொருத்த வேண்டும். விவசாய பயன்பாட்டிற்கு வாங்குகிறாரா அல்லது குற்றச்செயலுக்காக வாங்குகிறாரா என்பது குறித்து சம்பந்தப்பட்ட எல்லைக்குட்பட்ட ஸ்டேஷனில் தகவல் தெரிவிக்க வேண்டும் என, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thamilarasu - Chengalpattu,இந்தியா
01-அக்-202114:09:57 IST Report Abuse
Thamilarasu Nice and required initiative.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
01-அக்-202112:00:46 IST Report Abuse
duruvasar திருமா சைமன் என்ற இரட்டை குழல் துப்பாக்கி சத்தம் கூட்டணி தலைமைக்கு கேட்காத வரைக்கும் இதெல்லாம் ஒரு வெற்று அறிக்கையாகத்தான் பார்க்கப்படும். துப்பாக்கியிலிருந்து வரப்போவது ரவையா இல்லை ரவியா என்று பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.
Rate this:
Cancel
01-அக்-202111:12:56 IST Report Abuse
அப்புசாமி சேவிங் ப்ளேட் வாங்கலாமா, அதுக்கும் ஆதார் தேவையா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X