பொது செய்தி

தமிழ்நாடு

திண்டுக்கல்லில் போலீஸ் ரோந்தை கண்காணிக்கும் 'இ-பீட்' செயலி

Added : அக் 01, 2021
Share
Advertisement
திண்டுக்கல்-திண்டுக்கல்லில் போலீசாருக்கான 'இ-பீட்' செயலியை எஸ்.பி.ஸ்ரீனிவாசன் அறிமுகம் செய்தார்.குற்றங்களை தடுக்க போலீசார் இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். அவர்களை கண்காணிக்க குறிப்பிட்ட இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் 'பட்டா' (பீட்) புத்தகங்களில் கையெழுத்திட வேண்டும். உயரதிகாரிகள் அவ்வப்போது அதை ஆய்வு செய்வர். தற்போது இந்த புத்தகங்களுக்குப் பதிலாக,

திண்டுக்கல்-திண்டுக்கல்லில் போலீசாருக்கான 'இ-பீட்' செயலியை எஸ்.பி.ஸ்ரீனிவாசன் அறிமுகம் செய்தார்.குற்றங்களை தடுக்க போலீசார் இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். அவர்களை கண்காணிக்க குறிப்பிட்ட இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் 'பட்டா' (பீட்) புத்தகங்களில் கையெழுத்திட வேண்டும்.

உயரதிகாரிகள் அவ்வப்போது அதை ஆய்வு செய்வர். தற்போது இந்த புத்தகங்களுக்குப் பதிலாக, 'இ-பீட்' செயலியை நேற்று திண்டுக்கல் எஸ்.பி., அறிமுகம் செய்தார்.'பீட்' உள்ள இடங்களில் 'கியூ ஆர்' கோடு வைக்கப்படும். அதை சம்பந்தப்பட்ட பீட் போலீசார் நேரில் சென்று தங்கள் மொபைலில் ஸ்கேன் செய்ய வேண்டும். இதனை உயரதிகாரிகள் இருக்கும் இடத்தில் இருந்தே 'பீட்' போலீசாரை கண்காணிக்கலாம். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், தெருக்களில் இந்த 'கியூ ஆர்' கோடு ஒட்டப்பட உள்ளது.கண்காணிப்புஎஸ்.பி., கூறுகையில், ''முதற் கட்டமாக நகர் பகுதியில் 129 இடங்கள், ஊரக பகுதிகளில் 312 ஆக மொத்தம் 441 இடங்களில் பீட் லொகேஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் மாவட்டம் முழுதும் 1,508 இடங்களில் அறிமுகப்படுத்தப்படும். குடும்பத்துடன் வெளியூர் செல்வோர் அவர் பகுதி ஸ்டேஷனுக்கு தெரிவித்தால், அந்த வீட்டிலும் ஒட்டப்பட்டு, பீட் போலீசார் கண்காணிப்பர்'' என்றார். ஏ.டி.எஸ்.பி., லாவண்யா, டி.எஸ்.பி., கோகுல கிருஷ்ணன், ஏ.எஸ்.பி., அருண்கபிலன் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X