குடகனாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கணும் விவசாயிகள் வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குடகனாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கணும் விவசாயிகள் வலியுறுத்தல்

Added : அக் 01, 2021
Share
திண்டுக்கல்-'குடகனாற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும்' என, திண்டுக்கல்லில் நடந்த கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் விசாகன் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., லதா, கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், உதவி கலெக்டர் பிரியங்கா, வேளாண் இணை இயக்குனர் பாண்டித்துரை, தோட்டக்கலை துணை இயக்குனர் பெருமாள் சாமி, செயற்பொறியாளர் கோபி

திண்டுக்கல்-'குடகனாற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும்' என, திண்டுக்கல்லில் நடந்த கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் விசாகன் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., லதா, கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், உதவி கலெக்டர் பிரியங்கா, வேளாண் இணை இயக்குனர் பாண்டித்துரை, தோட்டக்கலை துணை இயக்குனர் பெருமாள் சாமி, செயற்பொறியாளர் கோபி முன்னிலை வகித்தனர்.கேரளாவை போல் 100 நாள் பணியாளர்களை, விவசாய பணியில் ஈடுபடுத்த வேண்டும். குடகனாறு தொடர்பான நிபுணர் குழு ஆய்வு அறிக்கையை உடனே வெளியிட வேண்டும்.

குடகனாற்றில் கலக்கும் தோல் தொழிற்சாலை கழிவுகளால் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது.தண்ணீரில் உப்பின் அளவு பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் வேடசந்துார் பகுதியில் பயிர் சாகுபடி பாதித்துள்ளது. குடகனாற்றில் கழிவு கலப்பதை தடுக்க வேண்டும். இலவச மின் இணைப்பிற்காக காத்திருக்கும் விவசாயிகளுக்கு உடனே மின் இணைப்பு வழங்க வேண்டும். சின்ன வெங்காயம் ஏற்றுமதிக்கு உதவ வேண்டும்' என, வலியுறுத்தினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X