பொது செய்தி

தமிழ்நாடு

கொடைக்கானல் சிறுமி தண்டால் எடுத்து சாதனை

Added : அக் 01, 2021
Share
Advertisement
கொடைக்கானல்-கொடைக்கானல் சிறுமி தீபிகா அதிவிரைவாக தண்டால் எடுத்து, 'கலாம் உலக சாதனை விருதை பெற்றுள்ளார்.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே மன்னவனுாரை சேர்ந்த அறிவழகன் - பாண்டீஸ்வரி தம்பதி மகள் தீபிகா 4. ஒரே நிமிடத்தில் 75 முறை தண்டால் எடுத்து சாதனை புரிந்தார். இதையடுத்து கலாம் உலக சாதனைக்கான விருது மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.அவரது பெற்றோர் கூறியதாவது: கொரோனா

கொடைக்கானல்-கொடைக்கானல் சிறுமி தீபிகா அதிவிரைவாக தண்டால் எடுத்து, 'கலாம் உலக சாதனை விருதை பெற்றுள்ளார்.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே மன்னவனுாரை சேர்ந்த அறிவழகன் - பாண்டீஸ்வரி தம்பதி மகள் தீபிகா 4. ஒரே நிமிடத்தில் 75 முறை தண்டால் எடுத்து சாதனை புரிந்தார். இதையடுத்து கலாம் உலக சாதனைக்கான விருது மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.அவரது பெற்றோர் கூறியதாவது: கொரோனா ஊரடங்கில் பள்ளி செல்லாததால் வீட்டில் கல்வி கற்பித்தோம். நினைவாற்றல் மிகுந்த தீபிகா, திருக்குறள், மந்திரம், யோகா போன்றவற்றில் அதிக ஈடுபாட்டுடன் உள்ளார்.சிறு வயதிலேயே அவரது ஆர்வத்தை அறிந்து பயிற்சியளித்தோம். இதனால் சாதனை புரிந்துள்ளார். முன்பு, நாமக்கல்லை சேர்ந்த சிறுவன் ஒரு நிமிடத்தில் 60 தண்டால் எடுத்ததே சாதனையாக இருந்தது. கின்னஸ் மற்றும் ஒலிம்பிக்கில் இடம் பெற செய்ய வேண்டும் என்ற நோக்கில் பயிற்சி வழங்கி ஊக்கப்படுத்துவோம். அதற்கான வழிகாட்டுதலுக்கு அரசு உதவ வேண்டும், என்றனர். தீபிகாவை 99766 60379 ல் வாழ்த்தலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X