பொது செய்தி

தமிழ்நாடு

வடமதுரையில் மின்தடையுடன்பி.எஸ்.என்.எல்., சேவையும் 'கட்'

Added : அக் 01, 2021
Share
Advertisement
வடமதுரை-வடமதுரையில் மின்தடை நாளில் பி.எஸ்.என்.எல்., அலைபேசி சேவை துண்டிக்கப்படுவதால் வாடிக்கையாளர்கள் பாதிப்பிற்குள்ளாகின்றனர்.வடமதுரையில் முதன்முதலில் அலைபேசி சேவை வழங்கியது பி.எஸ்.என்.எல்., நிறுவனம். இப்பகுதியில் இந்த சேவையை பயன்படுத்துவோர் அதிகம். தற்போது கொரோனா தொற்று பிரச்னையால் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு 'ஆன்லைன்' வகுப்பு நடப்பதால் அலைபேசி பயன்பாடு

வடமதுரை-வடமதுரையில் மின்தடை நாளில் பி.எஸ்.என்.எல்., அலைபேசி சேவை துண்டிக்கப்படுவதால் வாடிக்கையாளர்கள் பாதிப்பிற்குள்ளாகின்றனர்.வடமதுரையில் முதன்முதலில் அலைபேசி சேவை வழங்கியது பி.எஸ்.என்.எல்., நிறுவனம். இப்பகுதியில் இந்த சேவையை பயன்படுத்துவோர் அதிகம். தற்போது கொரோனா தொற்று பிரச்னையால் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு 'ஆன்லைன்' வகுப்பு நடப்பதால் அலைபேசி பயன்பாடு அதிகரித்துள்ளது. ஆனால் வடமதுரையில் மின்தடை நாளில் பி.எஸ்.என்.எல்., சேவை தடைபடுவதால் அனைவருமே அலைபேசியில் பேசவோ, அழைப்புகளை பெறவோ முடியாத நிலை ஏற்படுகிறது.பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் கூறுகையில், ''மின்தடை நேரத்தில் பயன்படுத்த ஜெனரேட்டர் இருந்தும் பயன்பாடின்றி உள்ளது. இதனால் மின் சப்ளை எப்போது நின்றாலும் பி.எஸ்.என்.எல்., அலைபேசி சேவையும் துண்டிக்கப்படுகிறது. இப்பிரச்னையை தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X