ஓய்வூதிய ஆணை வழங்கும் விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஓய்வூதிய ஆணை வழங்கும் விழா

Added : அக் 01, 2021
Share
திண்டுக்கல்-'பி.எப்., சந்தாதாரர்களுக்கு ஓய்வு பெறும் நாளே ஓய்வூதிய ஆணை வழங்கப்படும்' என, மதுரை மண்டல ஆணையாளர் அமியாகாந்த் தெரிவித்தார்.வேடசந்துாரில் நடந்த விழாவில் மதுரை மண்டல ஆணையாளர் அமியாகாந்த், தனியார் மில் ஊழியர்களுக்கு ஓய்வூதிய ஆணையை வழங்கினார்.அவர் தெரிவித்தது: 'ப்ரயாஸ்' திட்டத்தில் இ.பி.எப்., சந்தாதாரர்களுக்கு ஓய்வு பெறும் நாளே ஓய்வூதிய ஆணை

திண்டுக்கல்-'பி.எப்., சந்தாதாரர்களுக்கு ஓய்வு பெறும் நாளே ஓய்வூதிய ஆணை வழங்கப்படும்' என, மதுரை மண்டல ஆணையாளர் அமியாகாந்த் தெரிவித்தார்.வேடசந்துாரில் நடந்த விழாவில் மதுரை மண்டல ஆணையாளர் அமியாகாந்த், தனியார் மில் ஊழியர்களுக்கு ஓய்வூதிய ஆணையை வழங்கினார்.அவர் தெரிவித்தது: 'ப்ரயாஸ்' திட்டத்தில் இ.பி.எப்., சந்தாதாரர்களுக்கு ஓய்வு பெறும் நாளே ஓய்வூதிய ஆணை வழங்கப்பட்டு வருகிறது. ஓய்வு பெறும் இ.பி.எப்., சந்தாதாரர்கள் பயன் பெறும் வகையில் நிறுவனங்கள் அவர்களது ஆதார், வங்கி கணக்கு, நியமனதாரர்களின் விவரம் ஆகியவற்றை உடனே யு.ஏ.என்., எண்ணுடன் இணைக்க வேண்டும், என்றார். உதவி ஆணையாளர் ஜெரின் டேவிட், அமலாக்க அதிகாரிகள் வனஜா, சுப்பிரமணியன் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X