பொது செய்தி

தமிழ்நாடு

மின் அலுவலக இடமாற்றம்: அதிகாரிகள் ஆலோசனை

Added : அக் 01, 2021
Share
Advertisement
திருப்பரங்குன்றம் -திருப்பரங்குன்றத்தில் வாடகை கட்டடத்தில் ஆபத்தான நிலையில் இயங்கும் மின் நிலைய அலுவலகத்தை இடமாற்றம் செய்வது குறித்து எம்.எல்.ஏ., ராஜன்செல்லப்பா உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் மின்வாரிய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.அரசரடி உதவி செயற்பொறியாளர் சிவக்குமார், உதவி பொறியாளர்கள் மகாகணபதி, பாலுச்சாமி இதில் பங்கேற்றனர். எம்.எல்.ஏ., கூறுகையில், ''தற்போது

திருப்பரங்குன்றம் -திருப்பரங்குன்றத்தில் வாடகை கட்டடத்தில் ஆபத்தான நிலையில் இயங்கும் மின் நிலைய அலுவலகத்தை இடமாற்றம் செய்வது குறித்து எம்.எல்.ஏ., ராஜன்செல்லப்பா உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் மின்வாரிய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.அரசரடி உதவி செயற்பொறியாளர் சிவக்குமார், உதவி பொறியாளர்கள் மகாகணபதி, பாலுச்சாமி இதில் பங்கேற்றனர். எம்.எல்.ஏ., கூறுகையில், ''தற்போது எம்.எல்.ஏ., அலுவலகம் மக்கள் வசதிக்காக குன்றம் ஊருக்குள் தனியார் வாடகை கட்டடத்தில் இயங்குகிறது. எனவே தியாகராஜர் பொறியியல் கல்லூரி ரோட்டிலுள்ள அரசு எம்.எல்.ஏ., அலுவலகத்தை தற்காலிகமாக மின் அலுவலகமாக பயன்படுத்தலாம்,'' என்றார். இதற்காக பொதுப்பணித்துறையிடம் தடையில்லாச் சான்று பெற உதவுவதாகவும் தெரிவித்தார். ஆனால் கட்டடத்தில் இடவசதி போதியதாக இல்லை. நிலையூர் ரோடு கைத்தறிநகரில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என பொறியாளர்கள் தெரிவித்தனர். பொதுமக்கள் சென்று வர வசதியாக திருப்பரங்குன்றம் ஊருக்குள் அலுவலகம் மாற்ற எம்.எல்.ஏ., யோசனை தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X