பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி ஆசிரியர்களுக்கு 'எமிஸ்' மாற்றுப்பணி

Added : அக் 01, 2021
Share
Advertisement
மதுரை-மதுரையில் 39 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு 'எமிஸ்' இணையதளத்தில் விவரங்கள் பதிவேற்றம் செய்யும் மாற்றுப்பணி வழங்கப்பட்டுள்ளது.இக்கல்வியாண்டிற்கான அனைத்து வகை பள்ளி விவரங்களை 'எமிஸ்' இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக பள்ளி அளவில் எமிஸ் ஒருங்கிணைப்பாளராக ஒரு ஆசிரியர் செயல்பட்டாலும் மாவட்ட அளவில், கல்வி ஒன்றியத்திற்கு தலா ஒரு

மதுரை-மதுரையில் 39 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு 'எமிஸ்' இணையதளத்தில் விவரங்கள் பதிவேற்றம் செய்யும் மாற்றுப்பணி வழங்கப்பட்டுள்ளது.இக்கல்வியாண்டிற்கான அனைத்து வகை பள்ளி விவரங்களை 'எமிஸ்' இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக பள்ளி அளவில் எமிஸ் ஒருங்கிணைப்பாளராக ஒரு ஆசிரியர் செயல்பட்டாலும் மாவட்ட அளவில், கல்வி ஒன்றியத்திற்கு தலா ஒரு ஆசிரியர் வீதம் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட்டது.இதில் இடம் பெற்றுள்ள பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட மாற்றுப்பணி காலம் முடிவுற்ற நிலையில் மீண்டும் 39 ஆசிரியர்களுக்கு ஓராண்டுக்கான பணி நீட்டிப்பு உத்தரவை சி.இ.ஓ., சுவாமிநாதன் வழங்கினார். ஆசிரியர்களுக்கு மாற்றுப் பணி வழங்கப்பட்டதற்கு தலைமையாசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X