மேலுார் கோமதியாபுரம் கோவிந்தன் 54. ஓய்வுபெற்ற ராணுவவீரர். இவருக்கு ஸ்டேட் வங்கியில் இருந்து 'அப்டேட்' செய்வது போன்ற ஒரு எஸ்.எம்.எஸ்., வந்தது. அதை 'கிளிக்' செய்து, கேட்ட வங்கி விபரங்களை தெரிவித்த நிலையில் 3 முறை ஓ.டி.பி., எண் கேட்டது.
அதையும் அவர் 'டைப்' செய்து அனுப்ப, வங்கி கணக்கில் இருந்து மொத்தம் ரூ.65 ஆயிரம் எடுக்கப்பட்டது.கடந்த மாதம் மதுரை பழங்காநத்தத்தில் நாராயணன் என்பவரிடம் வங்கி அதிகாரி போல் பேசி ஓ.டி.பி., நம்பர் பெற்று ஆயிரக்கணக்கில் பணத்தை எடுத்தனர். மேலஅனுப்பானடி ஹவுசிங் போர்டு காலனியில் ஒரு பெண்ணிடம் வங்கி விபரங்களை பெற்று பணத்தை எடுத்தவர்கள், பிரதமரின் நிவாரண நிதிக்காக எடுத்ததாக எஸ்.எம்.எஸ்., அனுப்பினர்.
மக்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வு இல்லாததால் தொடர்ந்து பணத்தை இழந்து தவிக்கின்றனர்.சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டால் அதுகுறித்த தகவலை 24 மணி நேரமும் இயங்கும் 155260 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணுக்கு தெரிவிக்கலாம். உடனடியாக வங்கிக்கு தகவல் தெரிவித்து கணக்கு எண் முடக்கப்பட்டு பணம் பாதுகாக்கப்படும். இழந்த பணத்தையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வங்கி மேலாளர் பேசுவது போல் யார் பேசினாலும் நம்ப வேண்டாம். வங்கி விபரங்கள் குறித்து கேட்டாலோ, எஸ்.எம்.எஸ்., வந்தாலோ அதை பொருட்படுத்த வேண்டாம். நேரில் சென்று வங்கி விபரங்களை தெரிவிப்பது நல்லது. இவ்வாறு கூறினார்.மதுரை, அக்.1 -மதுரையில் வங்கியில் இருந்து பேசுவதாக கூறியும், எஸ்.எம்.எஸ்., அனுப்பியும் பணம் சுருட்டுவது தொடர்கிறது. இதுகுறித்து விழிப்புணர்வு இல்லாததால் மக்கள் பணத்தை இழந்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE