பொது செய்தி

தமிழ்நாடு

மாநில ஹாக்கி போட்டிகளில் வாடிப்பட்டி அணி சாம்பியன்

Added : அக் 01, 2021
Share
Advertisement
பெருங்குடி-மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி முன்னாள் மாணவர்கள்,மல்லிகை ஹாக்கி அகாடமி சார்பில் நடந்த மாநில ஹாக்கி போட்டிகளில் வாடிப்பட்டி அணி சாம்பியன் பட்டம் வென்றது.நாக் அவுட் முறையில் நடந்த போட்டிகளில் மதுரை, சிவகங்கை உள்ளிட்ட 14 அணியினர் பங்கேற்றனர். முதல் அரை இறுதிப்போட்டியில் வாடிப்பட்டி ஹாக்கி அணி 4-2 என்ற கோல் கணக்கில் மதுரை ரிசர்வ் லைன் ஹாக்கி கிளப் அணியை

பெருங்குடி-மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி முன்னாள் மாணவர்கள்,மல்லிகை ஹாக்கி அகாடமி சார்பில் நடந்த மாநில ஹாக்கி போட்டிகளில் வாடிப்பட்டி அணி சாம்பியன் பட்டம் வென்றது.நாக் அவுட் முறையில் நடந்த போட்டிகளில் மதுரை, சிவகங்கை உள்ளிட்ட 14 அணியினர் பங்கேற்றனர். முதல் அரை இறுதிப்போட்டியில் வாடிப்பட்டி ஹாக்கி அணி 4-2 என்ற கோல் கணக்கில் மதுரை ரிசர்வ் லைன் ஹாக்கி கிளப் அணியை வென்றது.2வது அரை இறுதிப்போட்டியில் அருப்புக்கோட்டை ஹாக்கி அணி 6-2 என்ற கோல் கணக்கில் கோவை ஸ்ரீசக்தி ஹாக்கி அணியை வென்றது.இறுதிப் போட்டியில் வாடிப்பட்டி ஹாக்கி அணி 1-0 என்ற கோல் கணக்கில்அருப்புக்கோட்டை ஹாக்கி அணியை வென்று சாம்பியன் பட்டம் பெற்றது. கல்லுாரி முதல்வர் கண்ணன், துணைமுதல்வர்கிருஷ்ணன், வணிகவியல் துறை தலைவர் ஜெயக்கொடி, உடற்கல்வி இயக்குனர் யுவராஜ் அணிவீரர்களை பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X