புதிய ஆஞ்சியோ பிளாஸ்டி தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மூதாட்டிக்கு இருதய சிகிச்சை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புதிய ஆஞ்சியோ பிளாஸ்டி தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மூதாட்டிக்கு இருதய சிகிச்சை

Added : அக் 01, 2021
Share
மதுரை-மதுரை ஹானா ஜோசப் மருத்துவமனை டாக்டர்கள் தென் தமிழகத்தில்முதல் முறையாக 'ஆஞ்சியோ பிளாஸ்டி'யில் 'இன்டர்வாஸ்குலர் லித்தோட்ரிப்ஸி' என்ற புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 80 வயது மூதாட்டிக்கு இருதய சிகிச்சை அளித்து காப்பாற்றினர். இருதய சிகிச்சை நிபுணர் மாதவன் கூறியதாவது: நெஞ்சுவலியால் அனுமதியான மூதாட்டிக்கு செய்த ஆஞ்சியோகிராமில் இடது முக்கிய ரத்த குழாயில்

மதுரை-மதுரை ஹானா ஜோசப் மருத்துவமனை டாக்டர்கள் தென் தமிழகத்தில்முதல் முறையாக 'ஆஞ்சியோ பிளாஸ்டி'யில் 'இன்டர்வாஸ்குலர் லித்தோட்ரிப்ஸி' என்ற புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 80 வயது மூதாட்டிக்கு இருதய சிகிச்சை அளித்து காப்பாற்றினர்.

இருதய சிகிச்சை நிபுணர் மாதவன் கூறியதாவது: நெஞ்சுவலியால் அனுமதியான மூதாட்டிக்கு செய்த ஆஞ்சியோகிராமில் இடது முக்கிய ரத்த குழாயில் சுண்ணாம்பு அடைப்பு இருந்தது. இருதய முன், பின் பகுதிகளில் ரத்த ஓட்டம் அளிக்கும் இடது ரத்த குழாயின் முன் கிளையில் 100, மற்றொரு குழாயில் 80 சதவீதம் சுண்ணாம்பு இருந்தது. ஓப்பன் ஹார்ட் சர்ஜரி தான் இதற்கு தீர்வு என்ற நிலையில் நோயாளி மறுத்தார். ஆஞ்சியோ பிளாஸ்டி திட்டமிட்டோம். சிக்கலான சிகிச்சைக்கு முன் இருதய சப்போர்ட், ரொட்டாபுளேஷன் டிரில் கருவிகள் தயாராக வைக்கப்பட்டது. ரத்த குழாயில் கடுகளவில் 4ல் 1 பங்கு கேமரா கொண்ட ஐ.வி.யூ.எஸ். கருவி செலுத்தி சுண்ணாம்பு படிவத்தை மதிப்பிட்டோம். 'இன்டர்வாஸ்குலர் லித்தோட்ரிப்ஸி' என்ற புதிய தொழில் நுட்பம் பயன்படுத்தி சிகிச்சை அளித்து காப்பாற்றினோம். இச்சிகிச்சையை நானும், டாக்டர் ஜெகன், மருத்துவகுழுவினரும் செய்தோம் என்றார். அவர்களை மருத்துவமனை தலைவர் அருண்குமார் பாராட்டினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X