பொது செய்தி

தமிழ்நாடு

அலங்காநல்லுார் சர்க்கரை ஆலையில் அரவையை துவக்க வலியுறுத்தல்

Added : அக் 01, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
மதுரை-அலங்காநல்லுார் சர்க்கரை ஆலையில் 2021-22ம் ஆண்டுக்கான கரும்பு அரவையை துவக்க வேண்டும் என மதுரையில் நடந்த கோரிக்கை மாநாட்டில் விவசாயிகள் வலியுறுத்தினர்.தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் ரவீந்திரன் முன்னிலை வகித்தார். எம்.பி., வெங்கடேசன், அகில இந்திய விவசாயிகள் சங்க துணை தலைவர் விஜூ கிருஷ்ணன், சங்க
 அலங்காநல்லுார் சர்க்கரை ஆலையில்  அரவையை துவக்க வலியுறுத்தல்

மதுரை-அலங்காநல்லுார் சர்க்கரை ஆலையில் 2021-22ம் ஆண்டுக்கான கரும்பு அரவையை துவக்க வேண்டும் என மதுரையில் நடந்த கோரிக்கை மாநாட்டில் விவசாயிகள் வலியுறுத்தினர்.தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் ரவீந்திரன் முன்னிலை வகித்தார். எம்.பி., வெங்கடேசன், அகில இந்திய விவசாயிகள் சங்க துணை தலைவர் விஜூ கிருஷ்ணன், சங்க நிர்வாகிகள் கதிரேசன், ராமராஜ், ஸ்டாலின்குமார், அடக்கிவீரணன், கர்நாடகா மாநில செயலாளர் பரத்ராஜ் உள்ளிட்டோர் பேசினர்.விவசாயிகள் கூறியதாவது: ஆலையில் 1800 ஏக்கர் கரும்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அரவையை துவங்கும் போது மேலும் 500 ஏக்கர் கரும்பு வழங்குவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே இந்தாண்டாவதுஅரவையை துவக்க வேண்டும். 2010ல் தமிழக அரசு தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் துணை மின் நிலையம் அமைக்க ரூ.110 கோடி ஒதுக்கியது. அப்பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
01-அக்-202111:51:17 IST Report Abuse
duruvasar முடியாதுங்க. விடியலுக்கும் எல்லை உண்டு. உற்பத்தி செய்யும் சர்க்கரையை எறும்பு தின்றுவிடும். பரவாயில்லையா ?
Rate this:
Cancel
Vaiyapuri Rajendran - Chennai,இந்தியா
01-அக்-202110:20:06 IST Report Abuse
Vaiyapuri Rajendran தமிழ் நாட்டில் கரும்புவிவசாயிகள், கூலி தொழிலாளர்கள் பணியாளர்கள், இதர வாகன ஓட்டுனர்கள் , என பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கி வரும் சர்க்கரை ஆலைகள் பற்றி இதுவரை முதல் அமைச்சர் அவர்களின் கவனத்துக்கு கொண்டு செல்ல வில்லை என்றே தெரிகிறது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X