அலங்காநல்லுார் சர்க்கரை ஆலையில் அரவையை துவக்க வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அலங்காநல்லுார் சர்க்கரை ஆலையில் அரவையை துவக்க வலியுறுத்தல்

Added : அக் 01, 2021 | கருத்துகள் (2)
Share
மதுரை-அலங்காநல்லுார் சர்க்கரை ஆலையில் 2021-22ம் ஆண்டுக்கான கரும்பு அரவையை துவக்க வேண்டும் என மதுரையில் நடந்த கோரிக்கை மாநாட்டில் விவசாயிகள் வலியுறுத்தினர்.தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் ரவீந்திரன் முன்னிலை வகித்தார். எம்.பி., வெங்கடேசன், அகில இந்திய விவசாயிகள் சங்க துணை தலைவர் விஜூ கிருஷ்ணன், சங்க
 அலங்காநல்லுார் சர்க்கரை ஆலையில்  அரவையை துவக்க வலியுறுத்தல்

மதுரை-அலங்காநல்லுார் சர்க்கரை ஆலையில் 2021-22ம் ஆண்டுக்கான கரும்பு அரவையை துவக்க வேண்டும் என மதுரையில் நடந்த கோரிக்கை மாநாட்டில் விவசாயிகள் வலியுறுத்தினர்.தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் ரவீந்திரன் முன்னிலை வகித்தார். எம்.பி., வெங்கடேசன், அகில இந்திய விவசாயிகள் சங்க துணை தலைவர் விஜூ கிருஷ்ணன், சங்க நிர்வாகிகள் கதிரேசன், ராமராஜ், ஸ்டாலின்குமார், அடக்கிவீரணன், கர்நாடகா மாநில செயலாளர் பரத்ராஜ் உள்ளிட்டோர் பேசினர்.விவசாயிகள் கூறியதாவது: ஆலையில் 1800 ஏக்கர் கரும்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அரவையை துவங்கும் போது மேலும் 500 ஏக்கர் கரும்பு வழங்குவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே இந்தாண்டாவதுஅரவையை துவக்க வேண்டும். 2010ல் தமிழக அரசு தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் துணை மின் நிலையம் அமைக்க ரூ.110 கோடி ஒதுக்கியது. அப்பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும் என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X