பொது செய்தி

தமிழ்நாடு

தாலுகா தலைமை மருத்துவமனை தேவை; இ.கம்யூ., மாநாட்டில் தீர்மானம்

Added : அக் 01, 2021
Share
Advertisement
ஆனைமலை : 'ஆனைமலையில், தாலுகா தலைமை மருத்துவமனை, தீயணைப்பு நிலையம் மற்றும் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும்,' என, இ.கம்யூ., மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.ஆனைமலையில், இ.கம்யூ., கட்சியின் ஒன்றியக்குழு மாநாடு நடந்தது. இதில், புதிய ஒன்றிய செயலாளராக பரமசிவம் தேர்வு செய்யப்பட்டார். கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாலமூர்த்தி, மாவட்ட குழு உறுப்பினர்

ஆனைமலை : 'ஆனைமலையில், தாலுகா தலைமை மருத்துவமனை, தீயணைப்பு நிலையம் மற்றும் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும்,' என, இ.கம்யூ., மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆனைமலையில், இ.கம்யூ., கட்சியின் ஒன்றியக்குழு மாநாடு நடந்தது. இதில், புதிய ஒன்றிய செயலாளராக பரமசிவம் தேர்வு செய்யப்பட்டார். கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாலமூர்த்தி, மாவட்ட குழு உறுப்பினர் கனகராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:வால்பாறை தேயிலைத்தோட்டங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு, 1.5 சென்ட் இடம் வழங்க வேண்டும். 40 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்த தொழிலாளர்களுக்கு, குடியிருப்புகள் கட்டித்தர வேண்டும்.வெள்ளத்தால் வீடுகளை இழந்த கல்லார்குடி, நாகரூத்து, சர்க்கார்பதி பழங்குடியினருக்கு வீடுகள் கட்டித்தர வேண்டும். மற்ற பழங்குடியின மக்களின் தொகுப்பு வீடுகளை புதுப்பித்துதர வேண்டும், வீடுகள் இல்லாதவர்களுக்கு வீடுகள் கட்டித்தர வேண்டும்.

ஆனைமலை தாலுகாவுக்கென, அரசு கலைக்கல்லுாரி அல்லது பாலிடெக்னிக் கல்லுாரி துவங்க வேண்டும்; தென்னை சார்ந்த தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும். ஆனைமலை மத்திய பஸ் ஸ்டாண்டை மீண்டும் செயல்படுத்த வேண்டும். அல்லது, புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும்.தாலுகா தலைமை மருத்துவமனை, தீயணைப்பு நிலையம் மற்றும் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும். ஆனைமலை பேரூராட்சிக்கான குப்பை கிடங்கை குடியிருப்புகளற்ற பகுதிக்கு மாற்ற வேண்டும். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்.இவை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X