பொது செய்தி

தமிழ்நாடு

வாழ்வாதாரம் பாதிக்காமல் அடிப்படை வசதி; வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேச்சு

Added : அக் 01, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம் : ''பழங்குடி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்,'' என, அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.காரமடை ஊராட்சி ஒன்றியம் தோலம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கோபனாரியில், என்.எம்.சி.டி., தொண்டு நிறுவனம் மற்றும் எம்.சி.ஆர்.சி., இணைந்து, மலைவாழ் மக்களுக்கு, புகையில்லா அடுப்புகள், சோலார் விளக்குகள் ஆகியவை வழங்கும்

மேட்டுப்பாளையம் : ''பழங்குடி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்,'' என, அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.

காரமடை ஊராட்சி ஒன்றியம் தோலம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கோபனாரியில், என்.எம்.சி.டி., தொண்டு நிறுவனம் மற்றும் எம்.சி.ஆர்.சி., இணைந்து, மலைவாழ் மக்களுக்கு, புகையில்லா அடுப்புகள், சோலார் விளக்குகள் ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது:கொரோனா காலத்தில், இப்பகுதியில் மலைவாழ் கிராம மக்களின் குழந்தைகள், பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால், தொண்டு நிறுவனத்தின் சார்பில் மலைவாழ் கிராமங்களில், பட்டம் பெற்ற மாணவியரை, ஆசிரியர்களாக நியமனம் செய்து, மலைவாழ் மாணவ-, மாணவியருக்கு பாடங்களை சொல்லிக் கொடுத்து வந்துள்ளனர்.

இத்திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது. திட்டத்தை, நீலகிரி மாவட்டத்தில் உள்ள மலைவாழ் கிராமங்களில், நிறைவேற்றப்படும்.பழங்குடி இன மக்களை வனத்தில் இருந்து வெளியே அனுப்ப முடியாது. அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.கோவை மாவட்ட வன அலுவலர் அசோக்குமார், நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் திருமலராவ், என்.சி.ஆர்.சி., முதன்மை மேலாளர் சக்கரபாணி, காரமடை ஒன்றிய செயலாளர் சுரேந்திரன் உட்பட பலர் பேசினர். 150 மலைவாழ் குடும்பங்களுக்கு, புகையில்லா அடுப்புகள், சோலார் விளக்குகள் வழங்கப்பட்டன.

அரக்கடவு, குட்டையூர், செங்குட்டை, மானார், கெத்தைக்காடு, நீராடி, கடம்பன்கோம்பை, பரளிக்காடு, கொடியூர், பூதப்பள்ளம், எழுத்துக்கள்புதுார், சேத்துமடை, விளாமரத்துார் மற்றும் வேப்பமரத்துார் ஆகிய, 14 மலைவாழ் கிராம மக்களுக்கு சோலார் மோட்டார் வழங்கப்பட்டது.மாநில செயற்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம், தோலம்பாளையம் ஊராட்சி தலைவர் ஜெயா செந்தில்குமார், ஒன்றிய கவுன்சிலர் சிவகாமி, மகளிர் அமைப்பு நிர்வாகிகள் பார்வதி, நாகை அம்மாள், தொண்டு நிறுவனத்தின் நிர்வாகிகள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றனர். திட்ட இயக்குனர் ராஜ் நன்றி கூறினார்.மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமை வகித்தார். என்.எம்.சி.டி., நிர்வாக அறங்காவலர் சங்கரநாராயணன் வரவேற்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X