கால நிலை மாற்றத்துக்கேற்ப பயிர் சாகுபடி; வேளாண் விஞ்ஞானிகள் அறிவுரை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கால நிலை மாற்றத்துக்கேற்ப பயிர் சாகுபடி; வேளாண் விஞ்ஞானிகள் அறிவுரை

Added : அக் 01, 2021
Share
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவில், கால நிலை மாற்றம், சாகுபடி மேற்கொள்ள வேண்டிய ரகங்கள் குறித்து, வேளாண் விஞ்ஞானிகள், விவசாயிகள் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.கிணத்துக்கடவு, வடபுதுாரில், விவசாயிகளிடையே கால நிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற உழவியல்துறை

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவில், கால நிலை மாற்றம், சாகுபடி மேற்கொள்ள வேண்டிய ரகங்கள் குறித்து, வேளாண் விஞ்ஞானிகள், விவசாயிகள் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

கிணத்துக்கடவு, வடபுதுாரில், விவசாயிகளிடையே கால நிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற உழவியல்துறை விஞ்ஞானி சங்கரநாராயணன் பேசியதாவது:மண்ணில் வழக்கமாக சாகுபடி மேற்கொள்ளும் பயிர்களில் எதிர்பார்த்த விளைச்சல் இல்லையே என உற்பத்தியாளர்கள் வருந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு தகுந்தாற்போல், விளை பயிர்களுக்கும் விலை கிடைக்காத நிலை உருவாகியுள்ளது.இதற்கு முக்கிய காரணம், கால நிலை மாற்றமாகும்.

மழை பெய்யும் என எதிர்பார்க்கும் நிலையில், மழை பெய்யாமல், கடும் வறட்சி நிலவுகிறது. பனிப்பொழிவு இல்லாத காலங்களில் அடர் பனி பொழிவு நிகழ்கிறது.குறிப்பிட்ட பருவத்தில் பயிர் சாகுபடி மேற்கொள்ளலாம் என நினைக்கும்போது, அனைத்துமே தலைகீழாக மாற்றம் காண்கிறது. இதனால், விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையும் கடந்து, பயிர் சாகுபடி மேற்கொண்டால், சுட்டெரிக்கும் வெயில், மழை, கடும் பனிப்பொழிவால் பயிர்கள் பாதிக்கிறது.எனவே, கால நிலை மாற்றத்துக்கேற்ற பயிர்களை சாகுபடி மேற்கொள்ள பழகிக்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து, பூச்சியியல்துறை முதன்மை விஞ்ஞானி ரமேஷ் பேசுகையில், ''கால நிலை மாற்றத்தால், பல வகை பூச்சிகள் தோன்றுகின்றன. சில வகை பூச்சியினங்கள் மருந்து தெளிப்புக்கும் கட்டுப்படாத நிலை ஏற்பட்டுள்ளது.பூச்சிகளால், விளைச்சலும், ஆதாயமும் குறைந்துள்ளது. இதை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,'' என்றார்.கலந்துரையாடல் நிகழ்ச்சியில், பங்கேற்ற விவசாயிகள், பயிர் சாகுபடியில் ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X