பொது செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில்...

Added : அக் 01, 2021
Share
Advertisement
பொதுமக்களுக்கு விழிப்புணர்வுவால்பாறை நகராட்சியில் துாய்மை பாரதம் திட்டத்தின் கீழ், வீடு மற்றும் கடைகளில் வெளியாகும் குப்பையை, துாய்மை பணியாளர்கள் தரம் பிரித்து எடுத்து செல்கின்றனர். இது குறித்து, வால்பாறை நகர் மக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் கூறியதாவது:வால்பாறை நகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ்,

பொதுமக்களுக்கு விழிப்புணர்வுவால்பாறை நகராட்சியில் துாய்மை பாரதம் திட்டத்தின் கீழ், வீடு மற்றும் கடைகளில் வெளியாகும் குப்பையை, துாய்மை பணியாளர்கள் தரம் பிரித்து எடுத்து செல்கின்றனர். இது குறித்து, வால்பாறை நகர் மக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் கூறியதாவது:வால்பாறை நகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், அனைத்து கடைகளிலும், வீடுகளிலும் உருவாகும், திட, திரவ கழிவுகளை பிரித்து தர வேண்டும். பொதுக்கழிப்பிடம் மற்றும் சமுதாய கழிப்பிடங்களை பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.பயணிகள் பயன்படுத்திய கழிவுகளை, திறந்தவெளியில் வீசுவதை தவிர்க்க வேண்டும். நகராட்சி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.திடக்கழிவு திட்ட நிதி எங்கே?ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட, 19 ஊராட்சிகளில், அங்கலக்குறிச்சி, சோமந்துறை, தென்சித்துார், பெத்தநாயக்கனுார், திவான்சாபுதுார், தாத்துார் உள்பட பெரும்பாலான ஊராட்சிகளில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் முடங்கியுள்ளது.குடியிருப்புகளில் முறையாக குப்பை சேகரிக்கப்படாமல் உள்ளதால், மக்கள் ரோட்டோரம் மற்றும் வீடுகளுக்கு அருகிலேயே குப்பை கொட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கிராமங்களில் சுகாதாரம் பாதித்துள்ளது.இதனால், திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு ஒதுக்கப்படும் நிதி, எங்கு செல்கிறது என்ற கேள்வி எழுகிறது. மக்களிடம் குப்பையை தரம் பிரித்து சேகரித்து, உரம் தயாரிப்பதை ஒன்றிய அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும்.ரோட்டை சீரமைத்த இளைஞர்கள்வால்பாறை அடுத்துள்ளது தோணிமுடி எஸ்டேட். வால்பாறையில் இருந்து முடீஸ், தோணிமுடி வழியாக சோலையாறு அணைக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது. முடீசில் இருந்து தோணிமுடி செல்லும் ரோடு, பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாத நிலையில், ரோடு குண்டும், குழியுமாக உள்ளது.இதனால், காலை, மாலை நேரத்தில் பள்ளி மாணவர்கள் செல்லும் அரசு பஸ், பள்ளத்தில் சிக்கி விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது.இதனையடுத்து, வால்பாறை கால்பந்து சங்க இணை செயலாளர் விமல் தலைமையில், அப்பகுதி இளைஞர் ஒன்றிணைந்து, தோணிமுடி எஸ்டேட் ரோட்டில் உள்ள பள்ளத்தில் கற்கள் போட்டு சமப்படுத்தினர். இளைஞர்களின் இந்த சேவையை பொதுமக்கள் பாராட்டினர்.ரயில்வே முன்பதிவு மையம் தேவைபொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம், மத்திய ரயில்வே துறை அமைச்சர்அஸ்வினி வைஷ்ணவை சந்தித்து மனு கொடுத்தார். மனுவில், கூறியிருப்பதாவது:வால்பாறையில் தேயிலை மிக முக்கிய தொழிலாளாக உள்ளது. இங்குள்ள, தேயிலை எஸ்டேட்களில், 50 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். சுமார் ஒரு லட்சம் மக்கள் தொகை கொண்ட வால்பாறையில், பல்வேறு மாவட்ட, மாநிலத்தை சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர்.வால்பாறை மலைப்பகுதியில் ரயில்வே முன்பதிவு மையம் துவங்க வேண்டும் என, கடந்த, பத்து ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் போராடி வருகின்றனர். மக்கள் சொந்த ஊருக்கு ரயிலில் சென்று வர வசதியாக, வால்பாறை நகரில் ரயில்வே முன்பதிவு மையம் ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளார்.நடைபாதையில் 'மெகா' பள்ளம்உடுமலையில் இருந்து மூணாறு செல்லும் ரோடு, முக்கிய வழித்தடமாக உள்ளது. அதிகப்படியான வாகனங்கள் இயக்கப்பட்டும் வரும் நிலையில், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், தளிரோட்டில், ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.அதனையொட்டி, குடியிருப்பு பகுதிகளுக்கு விரைந்து செல்லும் வகையில் சர்வீஸ் ரோடும் உள்ளது. இந்நிலையில், இந்த ரோட்டை நடைபாதை ஓரம் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால் 'சிலாப்' உடைந்துள்ளது. இதனால், இரவில் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், தவறி விழுந்து, விபத்திற்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.பாதசாரிகள் கூறுகையில், 'நடைபாதையில் உடைந்துள்ள மழைநீர் வடிகாலில், பாதசாரிகள் தவறி விழுந்து விடும் ஆபத்து உள்ளது. சிலாப்பை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்-மடத்துக்குளம் வட்டார விவசாயிகளுக்கு சிறு,குறு விவசாயி சான்றிதழ் விரைந்து வழங்கவும், மானியத்தில் நுண்ணீர் பாசனம் அமைக்க, பதிவு செய்யவும் தோட்டக்கலைத்துறையினரால் ஜோத்தம்பட்டியில் நேற்று சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில், நடந்த இந்த முகாமில் பல கிராம பகுதி விவசாயிகள் பங்கேற்றனர். சிறு,குறு விவசாயி சான்றிதழுக்கு, 11 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டன.இதோடு,தோட்டக்கலை பயிர்களான தக்காளி, வெங்காயம், மிளகாய், வெண்டை, கத்தரி, பூசணி வகைகள், தர்பூசணி, அவரை, தென்னை மற்றும் தென்னையில் ஊடு பயிர் செய்யும் காய்கறி வகைகளுக்கு நுண்ணீர் பாசனம் அமைக்க, 7.5 ஏக்கர் பரப்பிற்கு விண்ணப்பம் பெறப்பட்டது.கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மடத்துக்குளம் தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிளை பொறுப்பாளர் காளிமுத்து தலைமை வகித்தார்.கொரோனா தடுப்பு பணியில் உயிரிழந்த வருவாய்த்துறை அலுவலர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் அறிவித்தபடி 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்; முதுநிலை வருவாய் ஆய்வாளர் பதவி உயர்வுக்கு, அவசியமான பயிற்சிகளை உடனடியாக உரிய காலத்தில் மாவட்ட அளவில் நடத்த வேண்டும்.கருணை அடிப்படையிலான நியமனதாரர்களின் பணியினை, அரசாணையின்படி வரன் முறைபடுத்திட வேண்டும். ஒருங்கிணைந்த பணி முதுநிலை பட்டியல் தொடர்பாக அரசு மட்டத்தில், திருத்திய தெளிவுரைகள் உடன் வழங்கி நிரந்தர தீர்வு காண வேண்டும் உட்பட பல கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில், வலியுறுத்தப்பட்டது.மாணவிகளுக்கு போலீஸ் அறிவுரைவால்பாறை பியூலா மேல்நிலைப்பள்ளியில், பெண் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, பள்ளி முதல்வர் ஹென்றி தலைமையில் நடந்தது.போலீஸ் இன்ஸ்பெக்டர் கற்பகம் பேசியதாவது:படிக்கும் வயதில், மொபைல்போனில் அதிக நேரம் செலவிடக்கூடாது. அறிமுகம் இல்லாத நபர்கள், தொடர்பு கொண்டால் பேசக்கூடாது. 'ஆன்லைன்' வகுப்புகளுக்கு மட்டும் மொபைல்போனை பயன்படுத்த வேண்டும்.பள்ளி, வீடு, வெளியிடங்களில், மாணவிகளை யாரேனும் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தால், உடனடியாக பெற்றோர், போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பெண்கள் பாதுகாப்புக்கும், புகார் அளிப்பதற்கும் வசதியாக காவல்துறை சார்பில் அறிமுகபடுத்தப்பட்டுள்ள, எஸ்.ஓ.எஸ்., செயலியை, மாணவிகள் அனைவரும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்.பெண் குழந்தை திருமணம், வரதட்சணைக் கொடுமை, பாலியல் ரீதியாக துன்புறுத்தல் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து, கட்டணமில்லா தொலைபேசி எண்கள், 181, 1098 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.இவ்வாறு, தெரிவித்தார்.தரிசு நிலத்தில் பெருநெல்லி சாகுபடிஉடுமலை சுற்றுப்பகுதிகளில், நிலத்தடி நீர்மட்டம் குறைவாக உள்ள பகுதிகளில், நிலங்களில், எவ்வித சாகுபடியும் மேற்கொள்ளாமல், தரிசாக விட்டு வந்தனர். தற்போது, இத்தகைய நிலங்களில், பெருநெல்லி சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டத்துவங்கியுள்ளனர்.பல்லடம் பகுதியில், இச்சாகுபடி அதிகளவு இருப்பதால், அங்கிருக்கும் விவசாயிகளின் ஆலோசனைகளை பெற்று மரக்கன்றுகளை தேர்வு செய்கின்றனர். பெருநெல்லியானது பல்வேறு மருந்து தயாரிப்புக்காக, கேரளாவுக்கு அதிகளவு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. மருத்துவ குணங்கள் அதிகமிருப்பதால், உள்ளூர் சந்தைகளிலும் தேவை அதிகரித்து வருகிறது.'குறைந்த தண்ணீரிலும், பெரு நெல்லி மரக்கன்றுகளை பராமரிக்க முடியும். ஏக்கருக்கு, 600 செடிகள் வரை நடவு செய்துள்ளோம்,' என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X