பொது செய்தி

தமிழ்நாடு

சின்னதடாகத்தில் கனமழை: பள்ளங்களில் வெள்ளம்

Added : அக் 01, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம் : சின்னதடாகம் வட்டாரத்தில் நேற்று மாலை பெய்த கனமழையால், அங்குள்ள பள்ளங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.நேற்று மாலை, சின்னதடாகம் வட்டாரத்தில், சுமார் 45 நிமிடங்கள் கனமழை பெய்தது. இதனால், வீரபாண்டி, சின்னதடாகம், நஞ்சுண்டாபுரம் வட்டாரங்களில் உள்ள பள்ளங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.சின்னதடாகம் வட்டார விவசாயிகள் கூறியதாவது:செங்கல் சூளைகளுக்காக

பெ.நா.பாளையம் : சின்னதடாகம் வட்டாரத்தில் நேற்று மாலை பெய்த கனமழையால், அங்குள்ள பள்ளங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

நேற்று மாலை, சின்னதடாகம் வட்டாரத்தில், சுமார் 45 நிமிடங்கள் கனமழை பெய்தது. இதனால், வீரபாண்டி, சின்னதடாகம், நஞ்சுண்டாபுரம் வட்டாரங்களில் உள்ள பள்ளங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.சின்னதடாகம் வட்டார விவசாயிகள் கூறியதாவது:செங்கல் சூளைகளுக்காக பள்ளங்களில் மண் எடுத்து வந்ததால், மழைநீர் ஆங்காங்கே தேங்கி நின்றது. பள்ளங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவது கனவாக இருந்தது.

சின்னதடாகம் வட்டாரத்தில் செங்கல் சூளைகளில் இயக்கம் நிறுத்தப்பட்டதால், முறைகேடாக பள்ளங்களில் மண் அள்ள முடியவில்லை. தற்போது பெய்த மழையால், பள்ளங்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீரபாண்டி, சின்ன தடாகம், நஞ்சுண்டாபுரம், பன்னிமடை, சோமையம்பாளையம் உட்பட பகுதிகளில் உள்ள பள்ளங்களின் ஆக்கிரமிப்பை அகற்றி, அகலப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X