பொது செய்தி

தமிழ்நாடு

பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்! பள்ளிகளில் வரும் 4ல் வினியோகம்

Added : அக் 01, 2021
Share
Advertisement
உடுமலை : உடுமலை கல்வி மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, அந்தந்த பள்ளிகள் வாயிலாக அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, காலாண்டு, அரையாண்டு மற்றும் வருகைப்பதிவேடு அடிப்படையில் மாணவர்களுக்கு

உடுமலை : உடுமலை கல்வி மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, அந்தந்த பள்ளிகள் வாயிலாக அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, காலாண்டு, அரையாண்டு மற்றும் வருகைப்பதிவேடு அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. அதேநேரம், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., என, மேல்படிப்பு பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவ்வகையில், அந்தந்த பள்ளிகளின் இணையதள முகவரி வாயிலாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, மாணவர்களுக்கு வினியோகிக்கப்பட்டது.

இந்நிலையில், உடுமலை கல்வி மாவட்டத்தில், வரும், 4ம் தேதி முதல், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'உடுமலை கல்வி மாவட்டத்தில், 57 பள்ளிகள் வாயிலாக, 4,838 மாணவ, மாணவியருக்கு, அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. இன்று (அக்.,1ம் தேதி), அந்தந்த பள்ளிகளுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் அனுப்பி வைக்கப்படும். இதையடுத்து, வரும், 4ம் தேதி முதல், மாணவர்களிடம் நேரடியாக சான்றிதழ்கள் அளிக்கப்படும். மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளுக்குச் சென்று, அசல் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X