தமிழ்நாடு

எப்போது வரும் அந்த நாள்...! தமிழகத்தில் வேண்டும் ஒரு பருத்தி கிடங்கு

Added : அக் 01, 2021
Share
Advertisement
கருமத்தம்பட்டி : 'தமிழகத்தில், இந்திய பருத்தி கழகத்தின் கிடங்கு துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சிறு, குறு நுாற்பாலைகளின் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கோவை, திருப்பூர், ஈரோடு உட்பட மாவட்டங்களில், ஏராளமான சிறு, குறு, நடுத்தர நுாற்பாலைகள் இயக்கப்படுகின்றன. மேலும், பல ஆயிரம் ஸ்பின்டல்கள் கொண்ட பெரிய மில்களும் உள்ளன. இதன் வாயிலாக, லட்சக்கணக்கான

கருமத்தம்பட்டி : 'தமிழகத்தில், இந்திய பருத்தி கழகத்தின் கிடங்கு துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சிறு, குறு நுாற்பாலைகளின் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை, திருப்பூர், ஈரோடு உட்பட மாவட்டங்களில், ஏராளமான சிறு, குறு, நடுத்தர நுாற்பாலைகள் இயக்கப்படுகின்றன. மேலும், பல ஆயிரம் ஸ்பின்டல்கள் கொண்ட பெரிய மில்களும் உள்ளன. இதன் வாயிலாக, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இதேபோன்று, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலும் மில்கள் செயல்படுகின்றன.

நுாற்பாலைகளை இயக்க தேவைப்படும் முக்கியமான மூலப்பொருள் பஞ்சு. 30 ஆண்டுகளுக்கு முன், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அதிகளவு உற்பத்தி நடந்தது. இதனால், ஜின்னிங் பேக்டரிகள் முக்கியமான பெரிய ஊர்களில் செயல்பட்டு வந்தன. அதன் வாயிலாக, நுாற்பாலை உரிமையாளர்கள், சிரமமின்றி பஞ்சு கொள்முதல் செய்து வந்தனர். காலப்போக்கில், பருத்தி சாகுபடி படிப்படியாக குறைந்தது. இன்று, இருமாவட்டங்களில் பருத்தி விவசாயமே இல்லை என்ற நிலை ஏற்பட்டு விட்டது.

ஆந்திரா, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா உட்பட தொலைதுார மாநிலங்களில் இருந்து பஞ்சு கொள்முதல் செய்யும் நிலைக்கு, நுாற்பாலை உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஒவ்வொரு முறையும் பஞ்சு கொள்முதலுக்கு அவதிப்பட வேண்டிய சூழல் உள்ளது.

இதுகுறித்து சிறு, குறு நுாற்பாலைகளின் உரிமையாளர்கள் கூறியதாவது:சிறிய முதலீட்டுடன் நுாற்பாலைகளை துவக்கி இயக்கி வருகிறோம். பஞ்சு கொள்முதலுக்கு பெரும் தொகை தேவைப்படுகிறது. அதை தொலைதுாரத்தில் இருந்து அதிக பணம் செலவழித்து லாரிகளில் கொண்டுவர வேண்டியுள்ளது. பஞ்சு ஏலம் நடக்கும் இடங்களில் நேரடியாக சென்று ஏலம் எடுக்கலாம் என்றால், அங்கு பெரிய மில் உரிமையாளர்களுடன் போட்டி போட்டு ஏலம் எடுக்க முடிவதில்லை.

இந்திய பருத்தி கழகம் (சி.சி.ஐ.,) அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலை கொடுத்து, விவசாயிகளிடம் இருந்து, 150 லட்சம் டன் பேல் பஞ்சு ஆண்டு தோறும் வாங்குகிறது. அதை நுாற்பாலைகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. தொலைதுாரம் சென்று அதையும் வாங்க முடியாது.கோவையிலோ அல்லது தமிழகத்தின் ஏதேனும் ஒரு மாவட்டத்திலோ, இந்திய பருத்தி கழகத்தின் கிடங்கு துவக்க வேண்டும்.

அப்படி துவங்கினால், போக்குவரத்து சிரமமின்றி, குறைந்தபட்ச விலையில், இங்குள்ள நுாற்பாலைகள் பஞ்சு வாங்க முடியும். பல்வேறு அமைப்பினர் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ஆலோசித்து உரிய நடவடிக்கை மத்திய அரசு எடுக்கும் என, எதிர்பார்த்துள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X