பொது செய்தி

தமிழ்நாடு

மீட்கப்பட்ட புலிக்கு சிகிச்சை

Added : அக் 01, 2021
Share
Advertisement
வால்பாறை : வால்பாறை அருகே, புதரில் இருந்து மீட்கப்பட்ட புலி குட்டிக்கு, வனத்துறையினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட, மானாம்பள்ளி வனச்சரகம் முடீஸ் பகுதியில், புலி நடமாடுவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அங்கு ஆய்வு செய்த வனத்துறையினர், புதருக்குள் காயங்களுடன் புலி இருப்பதை உறுதி செய்தனர்.அதப்பின், வலையை கொண்டு
 மீட்கப்பட்ட புலிக்கு சிகிச்சை

வால்பாறை : வால்பாறை அருகே, புதரில் இருந்து மீட்கப்பட்ட புலி குட்டிக்கு, வனத்துறையினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட, மானாம்பள்ளி வனச்சரகம் முடீஸ் பகுதியில், புலி நடமாடுவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அங்கு ஆய்வு செய்த வனத்துறையினர், புதருக்குள் காயங்களுடன் புலி இருப்பதை உறுதி செய்தனர்.

அதப்பின், வலையை கொண்டு புலியை பிடித்து கூண்டில் ஏற்றினர். உடல் சோர்வான நிலையில் பிடிபட்ட ஒரு வயது ஆண் புலிக்கு, ரொட்டிக்கடையில் உள்ள வனஉயிரின மீட்பு மையத்தில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. முள்ளம்பன்றியை புலி உட்கொண்டதால், உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டு, சோர்வாக உள்ளது. புலிக்கு மூன்றாவது நாளாக, சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் மணிகண்டன் கூறுகையில், ''புலிக்கு உணவாக இறைச்சி, ரத்தம், பால் போன்றவை வழங்கப்படுகின்றன. இது தவிர, சத்துமாத்திரைகள், குளுக்கோஸ் கொடுக்கப்பட்டுள்ளன. புலியின் உடல் நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. உணவு அருந்திய நிலையில், நன்றாக ஓய்வெடுக்கிறது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X