பொது செய்தி

தமிழ்நாடு

தொண்டு நிறுவனம் விவசாயிகளுக்கு உதவி

Added : அக் 01, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் உழவர் உற்பத்தியாளர் குழுவுக்கு, ரோட்டரி கேலக்ஸி சங்கம் வேளாண் உபகரணங்களை வழங்கியது.பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நாயக்கன்பாளையத்தில், பெரியநாயக்கன்பாளையம் உழவர் உற்பத்தியாளர் குழு செயல்பட்டு வருகிறது. குழுவினர், கூட்டு பண்ணையத் திட்டத்தில், டிராக்டர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். டிராக்டருக்கு தேவையான ட்ரைலர் மற்றும்

பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் உழவர் உற்பத்தியாளர் குழுவுக்கு, ரோட்டரி கேலக்ஸி சங்கம் வேளாண் உபகரணங்களை வழங்கியது.

பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நாயக்கன்பாளையத்தில், பெரியநாயக்கன்பாளையம் உழவர் உற்பத்தியாளர் குழு செயல்பட்டு வருகிறது. குழுவினர், கூட்டு பண்ணையத் திட்டத்தில், டிராக்டர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். டிராக்டருக்கு தேவையான ட்ரைலர் மற்றும் உழவுக்கு தேவையான உபகரணங்களை, கோவை ரோட்டரி கேலக்ஸி சங்கம் சார்பில் வழங்கும் நிகழ்ச்சி, நாயக்கன்பாளையம் பெருமாள் கோவில் அருகே நடந்தது.

ரோட்டரி கேலக்ஸி கோவை மாவட்ட கவர்னர் ராஜசேகர், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நாயக்கன்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்திப்பிரியா, உழவர் உற்பத்தியாளர் குழு சார்பில் தலைவர் ரங்கசாமி, செயலாளர் பழனியப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X