பொது செய்தி

தமிழ்நாடு

நாளை நமதே... கேள்வி கேட்க தயாராகுங்க...!

Added : அக் 01, 2021
Share
Advertisement
கோவில்பாளையம் : தமிழகத்தில், நாளை கிராமசபை கூட்டம் நடக்கிறது. பல்வேறு கேள்விகள் எழுப்ப, பொதுமக்கள் தயாராகி வருகின்றனர்.தமிழகத்தில் கடந்த, 2019 டிசம்பரில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. வெற்றி பெற்றவர்கள் ஜனவரி முதல் வாரம் பொறுப்பேற்றனர். இதையடுத்து முதல் கிராமசபை கூட்டம் ஜனவரி 26ல் நடந்தது.கொரோனா அதிகரிப்பால் மே 1, ஆக. 15, அக். 2ஆகிய மூன்று கிராம சபை கூட்டங்கள் ரத்து

கோவில்பாளையம் : தமிழகத்தில், நாளை கிராமசபை கூட்டம் நடக்கிறது. பல்வேறு கேள்விகள் எழுப்ப, பொதுமக்கள் தயாராகி வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த, 2019 டிசம்பரில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. வெற்றி பெற்றவர்கள் ஜனவரி முதல் வாரம் பொறுப்பேற்றனர். இதையடுத்து முதல் கிராமசபை கூட்டம் ஜனவரி 26ல் நடந்தது.கொரோனா அதிகரிப்பால் மே 1, ஆக. 15, அக். 2ஆகிய மூன்று கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. நடப்பாண்டும் கொரோனா அச்சம் காரணமாக, ஜனவரி 26, மே 1, ஆக. 15, ஆகிய மூன்று கிராமசபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. 19 மாதங்களுக்கு பின், நாளை கிராமசபை கூட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்க்கார் சாமக்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) தனலட்சுமி கூறுகையில், ''எஸ்.எஸ்.குளம் வட்டாரத்தில், கொண்டையம்பாளையம், அத்திப்பாளையம், கீரணத்தம், வெள்ளானைப்பட்டி, வெள்ளமடை, அக்ரஹார சாமக்குளம் ஆகிய ஆறு ஊராட்சிகளில், 2ம் தேதி (நாளை) காலை 10:00 மணிக்கு கிராம சபை கூட்டம் நடக்கிறது. பொதுமக்கள் பங்கேற்று கோரிக்கைகள் குறித்து தெரிவிக்கலாம். கள்ளிப்பாளையம் ஊராட்சியில், 5வது வார்டு உறுப்பினருக்கான தேர்தல் வரும் 9ம் தேதி நடப்பதால், கள்ளிப்பாளையம் ஊராட்சியில் மட்டும் கிராமசபை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.கூட்டம் ரத்து

* சின்னதடாகம் ஊராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு:கிராம சபை கூட்டம், சின்ன தடாகம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில், காலை, 10:00 மணிக்கு நடக்கிறது. கோவிட் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும்.குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துவது, ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கொசுக்கள் வாயிலாக பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்தும் விவாதிக்கப்படும் என, அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.சோமையம்பாளையம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை, அசோகபுரம், நாயக்கன்பாளையம், பிளிச்சி ஆகிய ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.குருடம்பாளையம் ஊராட்சியில், வார்டு உறுப்பினருக்கான தேர்தல் நடைபெற உள்ளதால், அந்த ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

* கோவை மாவட்ட ஊராட்சி வார்டு எண் 3ல் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் வரும் 9ம் தேதி நடக்கிறது. தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், 'மாவட்ட கவுன்சிலர் தேர்தல் நடக்கும் ஒன்றியம் முழுவதும், தேர்தல் விதி நடத்தை அமல்படுத்தப்படும்' என தெரிவித்துள்ளது. இதையடுத்து, அன்னுார் ஒன்றியத்தில், 21 ஊராட்சிகளிலும், அக். 2ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறாது' என, அன்னுார் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

* சூலுார் ஒன்றியத்தில், 17 ஊராட்சிகளில் நாளை கிராம சபை கூட்டம் நடக்கிறது. * சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட பாப்பம்பட்டி ஊராட்சியில், சாலை அமைக்காமல் ரூ. 6 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக புகார் உள்ளது. கலெக்டர் அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதி செய்தனர். ஆனால், நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து, கிராம சபை கூட்டத்தில் இது குறித்து கேள்வி எழுப்ப மக்கள் திட்டமிட்டுள்ளனர்.* காரமடை ஊராட்சி ஒன்றியத்தில், தோலம்பாளையம், வெள்ளியங்காடு, காளம்பாளையம், கெம்மாரம்பாளையம், மருதுார், தேக்கம்பட்டி, நெல்லித்துறை, ஓடந்துறை, சிக்கதாசம்பாளையம், ஜடையம்பாளையம், சின்னகள்ளிபட்டி, முடுதுறை, இரும்பறை, இலுப்பநத்தம், பெள்ளேபாளையம், பெள்ளாதி, சிக்காரம்பாளையம் ஆகிய, 17 ஊராட்சிகளில், நாளை கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த ஊராட்சி தலைவர்கள் செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X