தமிழ்நாடு

வனத்தில் சிங்கவால்குரங்குகள்... அரிது... அரிதிலும் அரிது! பாதுகாக்க தேவை சிறப்பு திட்டம்

Added : அக் 01, 2021
Share
Advertisement
வால்பாறை : வால்பாறை வனப்பகுதியில், அரிய வகை வனவிலங்கான சிங்கவால் குரங்குகளின் வாழ்விடம் சுருங்கி, அவற்றுக்கான உணவும் கிடைக்காததால், ரோட்டுக்கு வரத்துவங்கியுள்ளன. அவற்றை பாதுகாக்க, வனப்பகுதியில் பழம் தரும் மரங்களை அதிகளவில் வளர்த்து, அவைகள் வாழ்வதற்கான சூழலை உருவாக்க வேண்டியது வனத்துறையின் கடமையாகும்.கோவை மாவட்டம், வால்பாறையில் அரிய வகை வனவிலங்குகளில் ஒன்றான
வனத்தில் சிங்கவால்குரங்குகள்... அரிது... அரிதிலும் அரிது! பாதுகாக்க தேவை சிறப்பு திட்டம்

வால்பாறை : வால்பாறை வனப்பகுதியில், அரிய வகை வனவிலங்கான சிங்கவால் குரங்குகளின் வாழ்விடம் சுருங்கி, அவற்றுக்கான உணவும் கிடைக்காததால், ரோட்டுக்கு வரத்துவங்கியுள்ளன. அவற்றை பாதுகாக்க, வனப்பகுதியில் பழம் தரும் மரங்களை அதிகளவில் வளர்த்து, அவைகள் வாழ்வதற்கான சூழலை உருவாக்க வேண்டியது வனத்துறையின் கடமையாகும்.

கோவை மாவட்டம், வால்பாறையில் அரிய வகை வனவிலங்குகளில் ஒன்றான சிங்கவால் குரங்குகள் அதிக அளவில் உள்ளன. சிங்கத்தை போன்ற முகத்தோற்றத்துடன், குரங்கு இனத்தை சேர்ந்த, இவ்வகை குரங்குகள் மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவை.இந்த வகை குரங்குகள், காடுகளில் மரங்களின் உச்சியில் வசிப்பவை. வனப்பகுதியில் கிடைக்கும் பழங்கள், காய்கள், விதைகளை உணவாக உட்கொண்டு வாழ்கின்றன.

பல்வேறு வகையான பழங்களை உட்கொண்டு, விதைகளை பரவலாக்கம் செய்வதால், காடுகளின் வளத்தை அதிகரிப்பதில் இவற்றின் பங்கு மிக முக்கியமானது. இந்த வகை குரங்குகள் தனிக்கூட்டமாக வாழும் இயல்புடையவை.ஒவ்வொரு கூட்டத்தையும், ஒரு ஆண் குரங்கு வழிநடத்தி செல்லும்.

மேற்கு தொடர்ச்சி மலையின் உச்சியில் அமைந்துள்ள வால்பாறை புதுத்தோட்டம் பகுதி, குரங்குமுடி, சின்கோனா, அக்காமலை கிராஸ்ஹில்ஸ் உள்ளிட்ட பகுதிகளில், 300க்கும் மேற்பட்ட சிங்கவால் குரங்குகள் உள்ளன.குறிப்பாக, வால்பாறை நகரை ஒட்டியுள்ள புதுத்தோட்டம் வனப்பகுதியில், நுாற்றுக்கும் மேற்பட்ட சிங்கவால் குரங்குகள் இருப்பதாக, வனவிலங்குகள் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

சமீப காலமாக, சிங்கவால் குரங்குகளின் வாழ்விடம் சுருங்கி வருவதாலும், வனப்பகுதியில் மரங்கள் வெட்டப்படுவதாலும், இவற்றின் வாழ்விடம் கொஞ்சம், கொஞ்சமாக குறைந்து வருகிறது. வனப்பகுதியில் போதிய உணவு கிடைக்காததால், இவ்வகை குரங்குகள் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைகின்றன.மேலும், நெடுஞ்சாலைகளில் இவை துள்ளி விளையாடும் போது, வாகனத்தில் அடிபட்டு உயிரிழக்காமல் இருக்க, வனத்துறை மற்றும் இயற்கை பாதுகாப்பு மையத்தின் சார்பில், ஐந்து இடங்களில் ஊஞ்சல்கள் கட்டப்பட்டுள்ளன.

இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது: வால்பாறையில், சிங்கவால் குரங்குகளின் வாழ்விடம் சுருங்கி கொண்டே செல்வதாலும், வனப்பகுதியில் அவற்றுக்கு தேவையான உணவு கிடைக்காததாலும், பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.சிங்கவால் குரங்குகள் வாகனத்தில் அடிபட்டு உயிரிழப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதுத்தோட்டம் பகுதியில், வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.அதே போல், காலை முதல் மாலை வரை இந்த வழித்தடத்தில் செல்லும் வாகனங்களால் சிங்கவால் குரங்குகள் அடிபடக் கூடாது என்பதற்காக, வனத்துறையினர், இயற்கை பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த தன்னார்வலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சிங்கவால் குரங்குகள் நடமாடும் பகுதியில் சுற்றுலா பயணிகள் தங்கள் வாகனங்களை மித வேகமாக இயக்க வேண்டும். இயற்கைகை பாதுகாத்தால் மட்டுமே, இந்தியாவில், அரிய வகை விலங்குகள் பட்டியலில் இடம் பெற்றுள்ள சிங்கவால் குரங்குகளை பாதுகாக்க முடியும். வனப்பகுதியில் பழம் தரும் மரங்களை அதிகளவில் வளர்த்து, அவைகள் வாழ்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X