பொது செய்தி

தமிழ்நாடு

கிராம மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

Added : அக் 01, 2021
Share
Advertisement
அன்னுார் : 'தொழில்பேட்டையால், 50 கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்' என, விவசாயிகள், எம்.பி., ராஜாவிடம் புகார் தெரிவித்தனர்.தமிழக அரசின் 'டிட்கோ' மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்போடு, அன்னுார் தாலுகாவில், குப்பனுார், அக்கரை செங்கப்பள்ளி, வடக்கலுார், மேட்டுப்பாளையம் தாலுகாவில், இலுப்பநத்தம், பள்ளேபாளையம் என ஆறு ஊராட்சிகளில், 3,800 ஏக்கரில், தொழிற்பேட்டை

அன்னுார் : 'தொழில்பேட்டையால், 50 கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்' என, விவசாயிகள், எம்.பி., ராஜாவிடம் புகார் தெரிவித்தனர்.

தமிழக அரசின் 'டிட்கோ' மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்போடு, அன்னுார் தாலுகாவில், குப்பனுார், அக்கரை செங்கப்பள்ளி, வடக்கலுார், மேட்டுப்பாளையம் தாலுகாவில், இலுப்பநத்தம், பள்ளேபாளையம் என ஆறு ஊராட்சிகளில், 3,800 ஏக்கரில், தொழிற்பேட்டை அமைக்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.இதில், தொழில் நிறுவனங்களுக்கு சொந்தமான நிலம், புறம்போக்கு நிலம், தனியார் நிலம் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அக்கரை செங்கப்பள்ளியில் விவசாயிகள் கூட்டம் நடந்தது. நீலகிரி எம்.பி., ராஜா பங்கேற்றார்.அவரிடம் விவசாயிகள் கூறுகையில், 'இப்பகுதியில், 50 கிராமங்களில் விவசாயமும், கால்நடை வளர்ப்பும் தான் வாழ்வாதாரம்.

தொழில்பேட்டை அமைக்க நிலம் கையகப்படுத்தினால், எங்கள் வாழ்வாதாரம் அழியும். எங்களுக்கு வேறு தொழில் தெரியாது. தொழில் பேட்டையால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும். கால்நடை வளர்ப்பும் அழிந்து விடும். எனவே, இங்கு தொழிற்பேட்டை அமைக்க கூடாது' என்றனர்.எம்.பி., ராஜா பதிலளிக்கையில், ''முதல்வரிடம் பேசி, விவசாயிகளின் நிலம் கையகப்படுத்தப்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.தொழில்பேட்டை வரவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் தரிசு நிலம் மற்றும் விவசாயம் அல்லாத நிலத்தில் தொழில்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.குப்பனுார், அக்கரை செங்கப்பள்ளி பகுதியை சேர்ந்த திரளான விவசாயிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X