பொது செய்தி

தமிழ்நாடு

பசுமை மாரத்தான் பங்கேற்க அழைப்பு

Added : அக் 01, 2021
Share
Advertisement
கோவில்பாளையம் : கோவில்பாளையத்தில், நாளை பசுமை மாரத்தான் ஓட்டம் நடக்கிறது.கொண்டையம்பாளையம் ஊராட்சியில், 140 ஏக்கர் பரப்பளவுள்ள காலிங்கராயன் குளம் உள்ளது. பராமரிப்பில்லாத இக்குளத்தில், காலிங்கராயன் குளம் பாதுகாப்பு அமைப்பு மற்றும் கவுசிகா நீர் கரங்கள் அமைப்பு சார்பில், ஒன்றரை ஆண்டாக துார்வாரி, கரையை ஒழுங்குபடுத்தி, மதகு அமைத்து அடர்வனம் உருவாக்கப்பட்டு

கோவில்பாளையம் : கோவில்பாளையத்தில், நாளை பசுமை மாரத்தான் ஓட்டம் நடக்கிறது.கொண்டையம்பாளையம் ஊராட்சியில், 140 ஏக்கர் பரப்பளவுள்ள காலிங்கராயன் குளம் உள்ளது.

பராமரிப்பில்லாத இக்குளத்தில், காலிங்கராயன் குளம் பாதுகாப்பு அமைப்பு மற்றும் கவுசிகா நீர் கரங்கள் அமைப்பு சார்பில், ஒன்றரை ஆண்டாக துார்வாரி, கரையை ஒழுங்குபடுத்தி, மதகு அமைத்து அடர்வனம் உருவாக்கப்பட்டு வருகிறது.பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, நாளை (2ம் தேதி) காலை 7:00 மணிக்கு, ஆறு கி.மீ., தூர பசுமை மாரத்தான் ஓட்டம் நடக்கிறது. காலிங்கராயன் குளத்தில், தமிழ் பண்பாட்டு மையத்தில் இருந்து ஓட்டம் துவங்குகிறது. 'ஆறு வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பங்கேற்கலாம்.அனைவருக்கும் பதக்கம் உண்டு. முன்பதிவு செய்ய 99449 21271, 79048 88597 என்னும் மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்' என, தன்னார்வலர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X