பொது செய்தி

தமிழ்நாடு

சீசன் இறுதியில் ஏமாற்றிய பருவமழை; பாசனத்திற்கு நீர் திறப்பால் குறையும் நீர் இருப்பு

Added : அக் 01, 2021
Share
Advertisement
உடுமலை : உடுமலை அருகேயுள்ள அமராவதி அணையிலிருந்து, மே 16 முதல், ராஜவாய்க்கால் பாசனத்திற்குட்பட்ட, 7,520 ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டு, ஜூலை, 23ல், அணை நிரம்பியது; மூன்று மாதமாக, அணைக்கு வரும் உபரி நீர் அனைத்தும், ஆறு மற்றும் பிரதான கால்வாயில் திறக்கப்பட்டு, இரு மாவட்ட பாசன நிலங்கள் பயன்பெற்று வந்தன.அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்கு

உடுமலை : உடுமலை அருகேயுள்ள அமராவதி அணையிலிருந்து, மே 16 முதல், ராஜவாய்க்கால் பாசனத்திற்குட்பட்ட, 7,520 ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டு, ஜூலை, 23ல், அணை நிரம்பியது; மூன்று மாதமாக, அணைக்கு வரும் உபரி நீர் அனைத்தும், ஆறு மற்றும் பிரதான கால்வாயில் திறக்கப்பட்டு, இரு மாவட்ட பாசன நிலங்கள் பயன்பெற்று வந்தன.

அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதிகளில், தென்மேற்கு பருவ மழை நல்ல முறையில் பெய்து வந்த நிலையில், கடந்த, ஒரு மாதமாக போதிய அளவு மழை பெய்யவில்லை. இதனால், அணைக்கு நீர் வரத்து குறைந்து காணப்படுகிறது.இந்நிலையில், சம்பா சாகுபடிக்காக, திருப்பூர், கரூர் மாவட்டங்களில், தாராபுரம், கரூர், அரவக்குறிச்சி தாலுகாவில், அலங்கியம் முதல் கரூர் வரை, 10 பழைய வாய்க்கால் பாசனத்திற்குட்பட்ட, 21,867 ஏக்கர் நிலங்களுக்கும், புதிய ஆயக்கட்டு பாசனத்தில், உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகாவிலுள்ள, 25,250 ஏக்கர் நிலங்களுக்கும், கடந்த, 20ம் தேதி முதல், உரிய இடைவெளி விட்டு தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில், ஆறு மற்றும் பிரதான கால்வாயில் நீர் திறக்கப்பட்டதால், அணை நீர் மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. கடந்த, 10 நாட்களில், அணை நீர் மட்டம், 5 அடி சரிந்துள்ளது. கடந்த, 20ம் தேதி, அணை நீர் மட்டம், மொத்தமுள்ள, 90 அடியில், 88.72 அடியாக இருந்தது.நேற்று காலை நிலவரப்படி, 83.53 அடியாக இருந்தது. மொத்த கொள்ளளவான, 4,047 மில்லியன் கன அடியில், 3,473.76 மில்லியன் கன அடியாக இருந்தது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு, 141 கன அடி என மிகவும் குறைந்து காணப்பட்டது. அணையிலிருந்து பாசனத்திற்கு, ஆற்று மதகு வழியாக, 400 கன அடி நீரும், பிரதான கால்வாயில், 440 கன அடி நீரும், கல்லாபுரம், ராமகுளம் கால்வாயில், 50 கன நீரும் என 890 கன அடி நீர் திறக்கப்பட்டிருந்தது.

அதிகாரிகள் கூறுகையில், 'பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு, 2021 பிப்.,2ம் தேதி வரை, உரிய இடைவெளி விட்டு நீர் வழங்க வேண்டும். தற்போது பருவ மழை ஏமாற்றியதால், அணைக்கு நீர் வரத்து மிகவும் குறைந்துள்ளது. இதனால், அணை நீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. வடகிழக்கு பருவ மழை துவங்கினால், மீண்டும் வரத்து அதிகரிக்கும் வாய்ப்புள்ளது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X