பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தல் பார்வையாளர் அன்னுாரில் அதிரடி ஆய்வு

Added : அக் 01, 2021
Share
Advertisement
அன்னுார் : புதிதாக நியமிக்கப்பட்ட தேர்தல் பார்வையாளர், உள்ளூர் அதிகாரிகளை அழைக்காமலே, அதிரடியாக அன்னுாரில் ஆய்வு நடத்தினர்.தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில், முழுமையாக உள்ளாட்சி தேர்தலும், 28 மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்குஇடைத்தேர்தலும், வரும், 6, 9ம் தேதிகளில் நடக்கிறது. இதற்காக, தமிழக அரசு, மாவட்ட வாரியாக ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை பார்வையாளர்களாக

அன்னுார் : புதிதாக நியமிக்கப்பட்ட தேர்தல் பார்வையாளர், உள்ளூர் அதிகாரிகளை அழைக்காமலே, அதிரடியாக அன்னுாரில் ஆய்வு நடத்தினர்.

தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில், முழுமையாக உள்ளாட்சி தேர்தலும், 28 மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்குஇடைத்தேர்தலும், வரும், 6, 9ம் தேதிகளில் நடக்கிறது. இதற்காக, தமிழக அரசு, மாவட்ட வாரியாக ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை பார்வையாளர்களாக நியமித்துள்ளது. கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்துக்கு தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரி மதிவாணன், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, தமிழக அரசு, புதிதாக வேளாண் மற்றும் வேளாண் நலத்துறை சிறப்பு செயலாளரான, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆபிரகாமை தேர்தல் பார்வையாளராக நியமித்துள்ளது. அவர், நேற்று மாலை அன்னுார் ஒன்றியத்தில், ஓட்டுச்சாவடிகள் அமைந்துள்ள வடக்கலுார், குப்பனுார், அல்லப்பாளையம், கஞ்சப்பள்ளி, காரேகவுண்டம்பாளையம் ஊராட்சிகளில், பகுதியில் ஆய்வு செய்தார்.முன்னதாக, தேர்தல் பார்வையாளர் வருவதாக வந்த தகவலையடுத்து, தேர்தல் அலுவலர் ரமேஷ்குமார், உதவி தேர்தல் அலுவலர் முத்துகுமாரசாமி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அனைவரும் காத்திருந்தனர். ஆனால், தேர்தல் பார்வையாளர் ஆபிரகாம், யாரையும் அழைக்காமல் தன்னுடன் வந்த கலெக்டர் அலுவலக அலுவலருடன் சேர்ந்து, ஐந்து ஊராட்சிகளில் ஓட்டுச்சாவடிகள் அமைந்துள்ள பகுதியில் ஆய்வு செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X