பொது செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்...

Added : அக் 01, 2021
Share
Advertisement
சான்றிதழ் வினியோகம் (படம்)முதலிபாளையம் நிப்ட்-டீ ஆடை வடிவமைப்பு கல்லுாரியில், பிப்., முதல் ஏப்., வரை மற்றும் ஜூலை 18ம் தேதி முதல் கடந்த 26ம் தேதி வரை இரண்டு பிரிவாக, இன்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. அடல் இன்குபேஷன் மைய நிர்வாக செயல் அதிகாரி பெரியசாமி, பயிற்சியாளர்கள் தனசேகர், சிவலிங்கம் இதனை

சான்றிதழ் வினியோகம் (படம்)முதலிபாளையம் நிப்ட்-டீ ஆடை வடிவமைப்பு கல்லுாரியில், பிப்., முதல் ஏப்., வரை மற்றும் ஜூலை 18ம் தேதி முதல் கடந்த 26ம் தேதி வரை இரண்டு பிரிவாக, இன்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. அடல் இன்குபேஷன் மைய நிர்வாக செயல் அதிகாரி பெரியசாமி, பயிற்சியாளர்கள் தனசேகர், சிவலிங்கம் இதனை வழங்கினர். மும்பை டெக்ஸ்டைல் இன்டெலிஜென்ஸ் இதழின் வெளியீட்டாளர் கோகைன், பி.எஸ்.,அப்பேரல்ஸ் நிறுவன துணை தலைவர் அறிவொளி பேசினர். கல்லுாரி ஒருங்கிணைப்பாளர் சண்முகம், கல்லுாரி முதல்வர் பாலகிருஷ்ணன் பங்கேற்றனர்.இலவச வீடு கோரிக்கைதிருப்பூர் மாவட்ட பூசாரிகள் நலசங்கத்தின் ஆலோசனை கூட்டம், அனுப்பர்பாளையத்தில் நடந்தது. மாநகர் மாவட்ட பொறுப்பாளர் மோகன்குமார் தலைமை வகித்தார். மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்று பேசினர். கோவில் அர்ச்சகர் மற்றும் பூசாரிகள், பணியாளர்களுக்கு, கோவில் நிலத்தில் குடியிருப்பு வசதி செய்து கொடுக்க வேண்டும். கிராமப்புற பூசாரிகளுக்கு, இலவசமாக வீடு கட்டி கொடுக்க வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஆக்கிரமிப்பு நிலம் மீட்புவெள்ளகோவில் அருகே குழலிபாளையத்தில், ஓடை புறம்போக்கு நிலத்தை, ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்தாக, காங்கயம் தாசில்தாருக்கு புகார் சென்றது. இதனால், தாசில்தார் சிவகாமி, ஆர்.ஐ., நிர்மலா தேவி, தலைமை நில அளவையாளர் ரமேஷ் ஆகியோர் ஆக்கிரமிப்பில் இருந்த, ஒரு ஏக்கர் 10 சென்ட் பூமியை அளந்து கல் நட்டினர். இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாவட்ட கவுன்சிலருக்கான தேர்தல் நடப்பதால், தேர்தல் முடிந்த பின், நிலம் கையகப்படுத்தப்படும் என, தாசில்தார் தெரிவித்தார்.பனை விதை நடவுதிருப்பூர் மாவட்ட, உதயநிதி ரசிகர் நற்பணி மன்றம் சார்பில், ஸ்ரீ ராமச்சந்திரா மிஷன் ஹார்ட்புல்னஸ் காடு வளர்ப்பு திட்டத்துடன் இணைந்து, 500 பனை விதைகள் நடவு செய்யப்பட்டது. மாநில செயலாளர் பாபு தலைமை வகித்தார். நவ., 27ல் உதயநிதி பிறந்த நாளில், ஒரு லட்சம் பனை விதை நடவு செய்ய இலக்கு முடிவு செய்யப்பட்டது. நற்பணி மன்ற தலைவர் சிவக்குமார், பொறுப்பாளர்கள் விக்னேஷ், சண்முகராஜா , விஜயகுமார், குப்புசாமி, தாராபுரம் பொறுப்பாளர் திருமலைசாமி பங்கேற்றனர்.பணியாளர் சங்க கூட்டம்வெள்ளகோவில் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்க உட்கோட்ட பேரவை கூட்டம், உட்கோட்ட தலைவர் ரவி தலைமையில் நடந்தது. தணிக்கையாளர் ராஜன் முன்னிலை வகித்தார். கோட்ட இணைச்செயலாளர் மணிமொழி, காங்கயம் வட்ட கிளை அரசு ஊழியர் சங்க செயலாளர் முத்துசாமி வாழ்த்துரை வழங்கினார். நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க மாநில தலைவர் பாலசுப்ரமணியம், கோட்ட செயலாளர் தில்லையப்பன் பேசினர். முன்னதாக அரசு ஊழியர் சங்க பொருளாளர் வரதராஜன் வரவேற்றார். உட்கோட்ட துணைத்தலைவர் மணிவேல் நன்றி கூறினார்.விவசாய சங்கம் கண்டனம்திருப்பூர் மாவட்ட கட்சி சார்பற்றி விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறுகையில், ''கூட்டுறவு சங்கங்கள் மூலம் பெற்ற விவசாய தங்க நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என, தமிழக அரசு அறிவித்தது. திடீரென சிட்டா, அடங்கல் இருந்தால் மட்டுமே கடன் தள்ளுபடி என்கின்றனர். நகைக்கடன் தள்ளுபடியில் மோசடி நடந்துள்ளதாக அரசு சந்தேகித்தால், உரிய ஆய்வு மேற்கொண்டு, அறிவிக்க வேண்டும். அதை தவிர்த்து, சிட்டா, அடங்கல் இணைத்திருந்தால் மட்டுமே கடன் தள்ளுபடி என்று கூறுவதை ஏற்க இயலாது,'' என்றார்.'தடம் மாறிய பஸ்கள்'திருப்பூர் நுகர்வோர் நல உரிமை சங்கத்தின், 25ம் ஆண்டு பொதுக்குழு, அதன் தலைவர் தங்கவேல் தலைமையில் நடந்தது. துணை தலைவர் முத்துக்குமார், செயலாளர் ரவி உட்பட நிர்வாகிகள் பேசினர். மாநகராட்சி மூலம், குடிநீர் வினியோகிக்கும் நேரம் குறித்து முன்னறிவிக்க வேண்டும். மினி பஸ்கள், அதற்கான வழித்தடத்தில் வராமல், மெயின்ரோட்டில் செல்வதை தடுக்க வேண்டும். கொசுவை அழிக்க, மருந்து அடிக்கும் பணியை துவக்க வேண்டும். சாக்கடைகளை துார்வாரி சுத்தப்படுத்த வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டடன. ர்மானம் நிறைவேற்றப்பட்டது.கழிவுநீர் அகற்றலாமே! (படம்)அவிநாசி பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், புதிய கூட்டு குடிநீர் திட்டம் சார்ந்து, குழாய் பதிக்கும் பணி நடந்தது. பணி முடிந்த நிலையில் அங்கு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. நெடுஞ்சாலை துறையினர் கூறுகையில், 'புதிய குடிநீர் திட்டப்பணிக்காக குழாய் பதிக்கும் பணி மேற்கொள்ளும் போது, கழிவுநீர் செல்லும் பாதை அடைபட்டதால், கழிவுநீர் தேங்கி நிற்கிறது. தற்போது குழாய் பதிக்கும் பணியை முடித்துள்ளனர். தேங்கியுள்ள கழிவுநீரை அப்புறப்படுத்தும் பணி விரைவில் மேற்கொள்ளப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X