ஓட்டுச் சீட்டு அறைக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுச் சீட்டு அறைக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு

Added : அக் 01, 2021
Share
அன்னுார் : ஓட்டுச் சீட்டு வைக்கப்பட்டுள்ள அறைக்கு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.அன்னுாரில், 15 ஊராட்சிகளில், மாவட்ட கவுன்சிலர் தேர்தல் வரும் 9ம் தேதி நடக்கிறது. இதில் அரசியல் கட்சியினர், 6 பேர், சுயேச்சைகள் ஐந்து பேர் என, 11 பேர் களத்தில் உள்ளனர். தேர்தலுக்கான ஓட்டு சீட்டுகள், கோவையில் உள்ள அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டு, நேற்று முன்தினம் கொண்டு

அன்னுார் : ஓட்டுச் சீட்டு வைக்கப்பட்டுள்ள அறைக்கு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அன்னுாரில், 15 ஊராட்சிகளில், மாவட்ட கவுன்சிலர் தேர்தல் வரும் 9ம் தேதி நடக்கிறது. இதில் அரசியல் கட்சியினர், 6 பேர், சுயேச்சைகள் ஐந்து பேர் என, 11 பேர் களத்தில் உள்ளனர். தேர்தலுக்கான ஓட்டு சீட்டுகள், கோவையில் உள்ள அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டு, நேற்று முன்தினம் கொண்டு வரப்பட்டு, அன்னுார் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள 'ஸ்டிராங்' ரூமில் வைக்கப்பட்டன.

இதையடுத்து, அந்த அறைக்கு, 24 மணி நேரமும், துப்பாக்கி ஏந்திய போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். '59 ஆயிரத்து, 203 வாக்காளர்களுக்கு, உபரி ஓட்டுச்சீட்டு சேர்த்து, 60 ஆயிரத்து 700 ஓட்டுச்சீட்டுகள் அச்சடிக்கப்பட்டுள்ளன' என, தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X