பொது செய்தி

தமிழ்நாடு

வடகிழக்கு பருவமழை விழிப்புணர்வு; ஆன்லைனில் 'மீம்ஸ்' போட்டி

Added : அக் 01, 2021
Share
Advertisement
திருப்பூர்: வடகிழக்கு பருவ மழை மற்றும் பேரிடர் மேலாண்மை பணி தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சமூக வலைதளங்கள் வாயிலாக, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், புதிய போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.சிறப்பான பதிவுகளை, சமூக வலை தளங்களில் பயன்படுத்தும் வகையில், வடகிழக்கு பருவமழை தொடர்பான விழிப்புணர்வு அம்சங்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக,

திருப்பூர்: வடகிழக்கு பருவ மழை மற்றும் பேரிடர் மேலாண்மை பணி தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சமூக வலைதளங்கள் வாயிலாக, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், புதிய போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பான பதிவுகளை, சமூக வலை தளங்களில் பயன்படுத்தும் வகையில், வடகிழக்கு பருவமழை தொடர்பான விழிப்புணர்வு அம்சங்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக, 'மீம்ஸ்', ஓவியம், 'ஸ்லோகன்', பாடல் மற்றும் பிற விழிப்புணர்வு பதிவுகளை, 'ஆன்லைன்' மூலம் அனுப்பலாம் என, தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை முகமை அறிவித்துள்ளது.

இதுகுறித்து வருவாய்த்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:வடகிழக்கு பருவமழை சேதம், முன்னெச்சரிக்கை ஏற்பாடு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு போட்டி நடத்தப்படுகிறது. 'மீம்ஸ்', பாடல், 'ஸ்லோகன்' ஆகிய விழிப்புணர்வு அம்சங்களை, tndrroct13gmail.com என்ற இணையதள முகவரிக்கு, வரும் 6ம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம்.சிறப்பான படைப்புக்கு, பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். அவற்றை பயன்படுத்தி, சமூக வலைதள விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X