தமிழ்நாடு

அதிகரிக்கும் குடிநீர் பிரச்னை; போக்குவரத்து பாதிப்பால் பலரும் அவதி

Added : அக் 01, 2021
Share
Advertisement
திருப்பூர் : திருப்பூரில், வீரபாண்டி மற்றும் குமார் நகர் என இரண்டு இடங்களில், குடிநீர் பிரச்னைக்காக பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.திருப்பூர் மாநகராட்சி, 52வது வார்டு வீரபாண்டி சுற்றுப்பகுதியில் 30 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியில் போதிய அளவு குடிநீர் வினியோகிப்பதில்லை; சாக்கடை துார் வாருதல்; குப்பை அகற்றுதல்; வீதி விளக்குகள்
 அதிகரிக்கும் குடிநீர் பிரச்னை; போக்குவரத்து பாதிப்பால் பலரும் அவதி

திருப்பூர் : திருப்பூரில், வீரபாண்டி மற்றும் குமார் நகர் என இரண்டு இடங்களில், குடிநீர் பிரச்னைக்காக பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.

திருப்பூர் மாநகராட்சி, 52வது வார்டு வீரபாண்டி சுற்றுப்பகுதியில் 30 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியில் போதிய அளவு குடிநீர் வினியோகிப்பதில்லை; சாக்கடை துார் வாருதல்; குப்பை அகற்றுதல்; வீதி விளக்குகள் பராமரிப்பதிலும் ஊழியர்கள் முறையாக பணியாற்றுவதில்லை என புகார் உள்ளது.இதுகுறித்து வீரபாண்டி கிளை இ.கம்யூ., சார்பில் பல்வேறு போராட்டங்கள் இருப்பினும் எந்த நடவடிக்கை இல்லை எனக் கூறி, நேற்று அப்பகுதியில் பொதுமக்களை திரட்டி மறியலில் ஈடுபட்டனர்.

வீரபாண்டி பஸ் ஸ்டாண்ட் முன் காலிக்குடங்களுடன் பெண்கள் மறியல் செய்தனர். போலீசார் அவர்களை நீண்ட நேரம் பேசி, சமாதானம் செய்து மறியலை கைவிட செய்தனர். அதன்பின், மாநகராட்சி அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டோருடன் பேச்சு நடத்தினர். கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க உறுதி அளிக்கப்பட்டதால், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

அவிநாசி ரோட்டிலும்...
திருப்பூர் மாநகராட்சி, 12 வது வார்டில் நூற்றுக்கணக்கான குடியிருப்பு பகுதிகள் உள்ளன. மூன்று மாதங்களுக்கு மேலாக 16 நாட்களுக்கு ஒரு முறையே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால், குடிநீரை சீராக வழங்க வலியுறுத்தி, அப்பகுதி பொதுமக்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று காலை, 8:00 மணிக்கு குமார் நகர் - அவிநாசி ரோட்டில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டது.

தகவலறிந்து, அப்பகுதிக்கு சென்ற மாநகராட்சி செயற்பொறியாளர் சபியுல்லா, முதல் மண்டல உதவி கமிஷனர் சுப்பிரமணியம், உதவி பொறியாளர் ராம் மோகன் ஆகியோர் மக்களிடம் பேசினர்.குடிநீர் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் விநியோகம் தாமதம் ஏற்பட்டது. இனி வாரம் ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படும் என உறுதியளித்ததால், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

பொதுமக்கள் கடும் அவதி

திருப்பூரில் சமீப நாட்களாக, குடிநீர் உட்பட பல பிரச்னைகளுக்காக போராட்டம் நடத்துவது அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால், அப்பாவி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, காலை நேரத்தில் மறியல் நடப்பதால், பனியன் நிறுவன தொழிலாளர்கள், கல்லுாரி, பள்ளி மாணவ, மாணவியர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, இது குறித்து போராட்டம் நடத்துவோர் சிந்திக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X