இ.எஸ்.ஐ., மருத்துவமனை கட்டுங்க; டீசா சங்கத்தினர் வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இ.எஸ்.ஐ., மருத்துவமனை கட்டுங்க; 'டீசா' சங்கத்தினர் வலியுறுத்தல்

Added : அக் 01, 2021
Share
திருப்பூர் : இ.எஸ்.ஐ., மருத்துவமனை கட்டுமான பணிகளை துவக்க வலியுறுத்தி, 3ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த 'டீசா' சங்கம் முடிவு செய்துள்ளது.திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில், வெளிமாவட்டம், வெளிமாநிலங்களைச்சேர்ந்த பல லட்சம் தொழிலாளர் பணிபுரிகின்றனர். தொழிலாளர் பயன்பாட்டுக்காக, இ.எஸ்.ஐ., மருத்துவமனை கட்டுவதற்கு, பூண்டி ரிங் ரோட்டில், இந்து

திருப்பூர் : இ.எஸ்.ஐ., மருத்துவமனை கட்டுமான பணிகளை துவக்க வலியுறுத்தி, 3ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த 'டீசா' சங்கம் முடிவு செய்துள்ளது.

திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில், வெளிமாவட்டம், வெளிமாநிலங்களைச்சேர்ந்த பல லட்சம் தொழிலாளர் பணிபுரிகின்றனர். தொழிலாளர் பயன்பாட்டுக்காக, இ.எஸ்.ஐ., மருத்துவமனை கட்டுவதற்கு, பூண்டி ரிங் ரோட்டில், இந்து அறநிலையத்துறையிடமிருந்து, 7.5 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது.கடந்த, 2019, பிப்., 10ல் திருப்பூருக்கு வந்த பிரதமர் மோடி, இ.எஸ்.ஐ., மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டினார். ஆனாலும், கட்டுமான பணி துவங்கவில்லை.விரைவில் மருத்துவமனை கட்டவேண்டும் என, பின்னலாடை தொழிலாளர்களும், தொழிற் சங்கங்கள், ஆடை உற்பத்தி துறையினரும் எதிர்பார்க்கின்றனர்.

இதற்காக, 'டேலென்ட் எக்ஸ்போர்ட் ஸ்டாப்ஸ்' (டீசா) சங்கத்தினர், இ.எஸ்.ஐ., மருத்துவமனை கட்டுமான பணிகளை உடனடியாக துவக்க கோரி, 3ம் தேதி மாலை, 4:00 மணிக்கு, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.திருப்பூர் குமரன் நினைவு மண்டபம் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில், அனைத்து தொழிலாளர்களும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X