பொது செய்தி

தமிழ்நாடு

அவசர கால கடன் திட்டம் நீட்டிப்பு

Added : அக் 01, 2021
Share
Advertisement
திருப்பூர் : அவசர கால கடன் திட்டம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதற்கு, மத்திய அரசு மற்றும் நிதி அமைச்சருக்கு, லகு உத்யோக் பாரதி பாாராட்டு தெரிவித்துள்ளது.இது குறித்து, லகு உத்யோக் பாரதி தேசிய செயலாளர் மோகனசுந்தரம் அறிக்கை:கடந்த செப்., 13ல், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் வங்கி கடன் பெறுவதில் ஏற்படும் சிக்கல்கள்

திருப்பூர் : அவசர கால கடன் திட்டம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதற்கு, மத்திய அரசு மற்றும் நிதி அமைச்சருக்கு, லகு உத்யோக் பாரதி பாாராட்டு தெரிவித்துள்ளது.

இது குறித்து, லகு உத்யோக் பாரதி தேசிய செயலாளர் மோகனசுந்தரம் அறிக்கை:கடந்த செப்., 13ல், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் வங்கி கடன் பெறுவதில் ஏற்படும் சிக்கல்கள் குறித்தும், அவசர கால கடன் உத்தரவாத திட்டத்தை நீண்டிக்க வேண்டும் எனவும் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தோம்.லகு உத்யோக் பாரதியின் கோரிக்கையை ஏற்று, அவசர கால கடன் உத்தரவாத திட்டத்தை, வரும் 2022, மார்ச் 31ம் தேதி வரை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

அவசர கடன் திட்டம் 1.0 மற்றும் 2.0 ன் கீழ், குறு, சிறு நிறுவனங்கள், 2021 பிப்., 29 அல்லது 2021, மார்ச் 31ம் தேதி வரை நிலுவையில் உள்ள கடன் தொகையில், 10 சதவீதம் கூடுதல் கடன் பெறலாம். அவசர கடன் திட்டம் 1.0, 2.0 ல், கடன் பெறாத வர்த்தகர்கள், 2021, மார்ச் 31ம் தேதி வரை நிலுவையில் உள்ள கடன் தொகையில், 30 சதவீதம் வரை கடன் பெறலாம்.முந்தைய கடன் திட்டத்தை பயன்படுத்தாதவர்கள், அவசர கடன் திட்டம் 3.0 ன் கீழ், 2021, மார்ச் 31ம் தேதி வரை நிலுவையில் உள்ள கடன் தொகையில், 40 சதவீதம் வரை கடன் பெறலாம்.

அவசர கடன் திட்டம் நீட்டிப்பு, கொரோனா இரண்டாவது அலையால் மிக மோசமாக பாதிக்கப்படுவதிலிருந்து, நிறுவனங்களை பாதுகாக்கிறது. இவ்வாறு, அவர் அதில் தெரிவித்துள்ளார்.அவசர கடன் திட்டம் 1.0, 2.0 ல், கடன் பெறாத வர்த்தகர்கள், 2022, மார்ச் 31ம் தேதி வரை நிலுவையில் உள்ள கடன் தொகையில், 30 சதவீதம் வரை கடன் பெறலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X