தமிழ்நாடு

தடுப்பூசி செலுத்த மறக்க வேண்டாம்.. 4ம் இடத்தில் திருப்பூர்

Added : அக் 01, 2021
Share
Advertisement
திருப்பூர் : திருப்பூரில் நான்கு நாட்களுக்கு பின் மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. இதுவரை செலுத்தாவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.தடுப்பூசி செலுத்தாத, 18 வயதை கடந்தவர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள சுகாதாரத்துறை அழைப்பு விடுத்துள்ளது. மாநகராட்சி முதல் மண்டலத்தில், குலாம்காதர் கார்டன், இரண்டாம் மண்டலத்தில் சத்யா காலனி, 3வது
தடுப்பூசி செலுத்த மறக்க வேண்டாம்.. 4ம் இடத்தில் திருப்பூர்

திருப்பூர் : திருப்பூரில் நான்கு நாட்களுக்கு பின் மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. இதுவரை செலுத்தாவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.தடுப்பூசி செலுத்தாத, 18 வயதை கடந்தவர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள சுகாதாரத்துறை அழைப்பு விடுத்துள்ளது.

மாநகராட்சி முதல் மண்டலத்தில், குலாம்காதர் கார்டன், இரண்டாம் மண்டலத்தில் சத்யா காலனி, 3வது மற்றும் 4வது மண்டலத்தில் முறையே கே.செட்டிபாளையம் ஏ.டி., காலனி, சூசையாபுரத்தில் இன்று தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.நகர பகுதிகள்அண்ணா நெசவாளர் காலனி, குருவாயூரப்பன் நகர், கோவில்வழி, புதுராமகிருஷ்ணாபுரம், மேட்டுப்பாளையம், நெருப்பெரிச்சல், நெசவாளர் காலனி, பி.ஆர்.எம்., பங்களா ஸ்டாப், பெரியாண்டிபாளையம், சூசையாபுரம், சுண்டமேடு, மண்ணரை.டி.எஸ்.கே., காலனி, தென்னம்பாளையம் (கே.வி.ஆர்., காலனி), வீரபாண்டி, 15 வேலம்பாளையம் மற்றும் நல்லுார் ஆகிய, 17 ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று தடுப்பூசி முகாம் நடக்கிறது. 5,950 கோவிஷீல்டு, 2,550 கோவேக் ஷின் என, 8,500 தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.


புறநகர பகுதிகள்


திருப்பூர்: இடுவாய், பொன்னாபுரம், பெருமாநல்லுார், பள்ளிபாளையம், தொரவலுார், காளிபாளையம், கணக்கம்பாளையம் ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் மற்றும் மங்கலம் சமுதாய நலக்கூடம்,அவிநாசி: பெரியாயிபாளையம், ராக்கியாபாளையம், கஸ்துாரிபாய் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகள், சேவூர், துலுக்கமுத்துார், தெக்கலுார்.குன்னத்துார்: நடுப்பட்டி, மலைக்கோவில், தொட்டிபாளையம், கவுண்டம்பாளையம், ரெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய பள்ளிகள். குன்னத்துார், வெள்ளிரவெளி ஆரம்ப சுகாதார நிலையம்.

பல்லடம்: அரசு கலை கல்லுாரி, செம்மிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம், பருவாய் ஊராட்சி அலுவலகம், காரணம் பேட்டை மண்டபம், புளியம்பட்டி, அருள்புரம் லீஷார்க் நிறுவனம், கணபதிபாளையம், கார்த்திகேயன் மில்ஸ், சாமாளபுரம்,பொங்கலுார்: அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கரியாம்பாளையம், உகாயனுார், கழுவேறிபாளையம் ஊராட்சி ஒன்றிய பள்ளிகள்.

வெள்ளகோவில்: முத்துார் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், மூலனுார், வடுகப்பட்டி, கன்னிவாடி, கம்பளியம்பட்டி சுகாதார நிலையம், வெள்ளகோவில் மேற்கு, தீத்தம்பாளையம், ஊராட்சி ஒன்றிய பள்ளிகள்.மொத்தம், 73 மையங்களில், 17 ஆயிரத்து, 900 கோவிஷீல்டு, 6,890 கோவேக் ஷின் என, 24 ஆயிரம், 790 தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இவை தவிர, திருப்பூர் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, அவிநாசி, பல்லடம், தாராபுரம், உடுமலை உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள ஒன்பது அரசு மருத்துவமனைகளில் இன்று தடுப்பூசி முகாம் நடக்கிறது.


4ம் இடத்தில் திருப்பூர்


சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் கூறுகையில், ''மாநிலத்தில் தடுப்பூசி செலுத்தியதில் திருப்பூர் நான்காமிடத்தில் உள்ளது. நேற்று வரை, 18.25 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இன்று நடக்கும் முகாமில், 18 வயதை கடந்தவர், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். இதற்காக, 40 ஆயிரம் 'டோஸ்' தருவிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X