சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'ரிக்' மேலாளரிடம் வழிப்பறி; 'டிராவல்ஸ்' நடத்துபவர் கைது

Added : அக் 01, 2021
Share
Advertisement
திருப்பூர் : குன்னத்துாரில் ரிக் சர்வீஸ் நிறுவன மேலாளரிடம் கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட டிராவல்ஸ் நிறுவன உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.குன்னத்துார், சந்தையபாளையத்தை சேர்ந்தவர் துரைசாமி, 61; ரிக் சர்வீஸ் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். நேற்று வலையபாளையத்தில் ஒருவரை பார்க்க, டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அவரை பின்தொடர்ந்து சென்ற நபர்

திருப்பூர் : குன்னத்துாரில் ரிக் சர்வீஸ் நிறுவன மேலாளரிடம் கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட டிராவல்ஸ் நிறுவன உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

குன்னத்துார், சந்தையபாளையத்தை சேர்ந்தவர் துரைசாமி, 61; ரிக் சர்வீஸ் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். நேற்று வலையபாளையத்தில் ஒருவரை பார்க்க, டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அவரை பின்தொடர்ந்து சென்ற நபர் ஒருவர் திடீரென வழிமறித்தார்.முகவரி கேட்பது போல் நடித்து, திடீரென கத்தியை காட்டி மிரட்டி, பணம், வாட்ச், மோதிரம் ஆகியவற்றை பறித்து கொண்டு தப்பி சென்றார்.

புகாரின் பேரில், குன்னத்துார் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பிகா தலைமையிலான போலீசார் விசாரித்தனர்.அதில், தாளப்பதி என்ற இடத்தில் சந்தேக நபரை பிடித்து விசாரித்தனர். அவர், சென்னை, ராயபேட்டையை சேர்ந்த சபீர் முகமது நுார், 37 என்பதும், குன்னத்துாரில் தங்கி டிராவல்ஸ் நடத்தி வருவதுதெரிந்தது.துரைசாமியிடம் வழிப்பறியில் ஈடுபட்டதும், இரண்டு நாட்களுக்கு முன்பு, சுப்ரமணி, 61 என்பவர் வீட்டில் திருட்டு முயற்சியில் ஈடுபட்டது தெரிந்தது. இதுதொடர்பாக, சபீர் முகமது நுாரை குன்னத்துார் போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X