சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபர் கொலை மேலும், இருவர் கைது

Added : அக் 01, 2021
Share
Advertisement
திருப்பூர் : தாராபுரத்தில், விருதுநகர் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், மேலும், இருவரை போலீசார் கைதுசெய்தனர்.தாராபுரம் - திருமலைப்பாளையத்தில், விருதுநகரை சேர்ந்த விக்னேஷ், 28 என்பவரை கடந்த ஆக., 18 ம் தேதி கும்பல் ஒன்று வெட்டி கொலை செய்தது. அலங்கியம் போலீசார் விசாரித்தனர்.அதில், விருதுநகரில், சங்கர் மற்றும் விக்னேஷ் தரப்புக்கும் இடையே நடந்த பிரச்னையை கண்டறிந்தனர்.


திருப்பூர் : தாராபுரத்தில், விருதுநகர் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், மேலும், இருவரை போலீசார் கைதுசெய்தனர்.

தாராபுரம் - திருமலைப்பாளையத்தில், விருதுநகரை சேர்ந்த விக்னேஷ், 28 என்பவரை கடந்த ஆக., 18 ம் தேதி கும்பல் ஒன்று வெட்டி கொலை செய்தது. அலங்கியம் போலீசார் விசாரித்தனர்.அதில், விருதுநகரில், சங்கர் மற்றும் விக்னேஷ் தரப்புக்கும் இடையே நடந்த பிரச்னையை கண்டறிந்தனர். பழிக்கு பழி வாங்கும் வகையில், ஐந்தாவது நபராக விக்னேஷ் கொலை செய்யப்பட்டது தெரிந்தது.

கொலையில் தொடர்புடைய, சேலத்தை சேர்ந்த மனோஜ், 22, விருதுநகரை சேர்ந்த செல்வம், 24, கருப்புசாமி, 20, கரூரை சேர்ந்த சுகன்ராஜ், 23, ஏஞ்சல் செல்வம், 36, ஒரு சிறுவன் உட்பட, ஏழு பேரை போலீசார் கைது செய்தனர். கொலை வழக்கு தொடர்பாக, பாஸ்கர், மணிகண்டன் ஆகிய, இருவர் மதுரை வாடிப்பட்டி கோர்ட்டில் ஏற்கனவே சரணடைந்தனர்

.தலைமறைவாக உள்ள சிலரை பிடிக்க மதுரையில் தனிப்படை போலீசார் முகாமிட்டு தேடி வந்தனர். அதில், சிவகாசியை சேர்ந்த ரமேஷ், 33 மற்றும் குணசங்கர் காளி, 36 ஆகியோரை நேற்று கைது செய்தனர். கொலையில், வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என, அலங்கியம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X