பொது செய்தி

தமிழ்நாடு

துறை வாரியான பணி நிலுவை; மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

Added : அக் 01, 2021
Share
Advertisement
திருப்பூர் : அரசுத்துறைகள் வாரியாக, நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென, ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.மத்திய, மாநில அரசு திட்டங்கள், மாவட்ட அளவிலான திட்டம், பல்வேறு அரசுத்துறைகளின் வளர்ச்சி பணிகளை, பல்வேறு அரசுத்துறைகள் ஒன்றுபட்டு செய்ய வேண்டிய நிலை உள்ளது.குறிப்பாக, ஊரக வளர்ச்சித்துறையில், கட்டுமான பணி நடந்தாலும், மின்

திருப்பூர் : அரசுத்துறைகள் வாரியாக, நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென, ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

மத்திய, மாநில அரசு திட்டங்கள், மாவட்ட அளவிலான திட்டம், பல்வேறு அரசுத்துறைகளின் வளர்ச்சி பணிகளை, பல்வேறு அரசுத்துறைகள் ஒன்றுபட்டு செய்ய வேண்டிய நிலை உள்ளது.குறிப்பாக, ஊரக வளர்ச்சித்துறையில், கட்டுமான பணி நடந்தாலும், மின் இணைப்பு வழங்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் வடிகால் வாரியம், குழாய் இணைப்பு குடிநீர் பணிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

இப்படியாக, ஒன்றுக்கும் மேற்பட்ட அரசுத்துறைகள் ஒன்றுபட்டு செய்ய வேண்டிய பணிகள், ஏதாவது ஒருகாரணத்தால் நிலுவையில் இருக்கின்றன. அவ்வாறான பிரச்னைகளை கண்டறிந்து, எளியமுறையில் தீர்க்க, மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடத்த, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி நேற்று, ஒருங்கிணைப்பு குழு கூட்டம், கலெக்டர் வினீத் தலைமையில் நடந்தது.போலீஸ், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, கால்நடைத்துறை, சுகாதாரத்துறை, சுகாதாரப்பணிகள், நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சி அமைப்புகள் உட்பட, அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.துறைவாரியாக நிலுவையில் உள்ள பணிகளை ஆய்வு செய்த கலெக்டர், மக்கள் நலன்கருதி, நிலுவையில் உள்ள பணிகளை, அனைத்து துறைகளும் ஒருங்கிணைத்து செயல்படுத்தி முடிக்க வேண்டுமென உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X