பொது செய்தி

தமிழ்நாடு

மரத்தின் மீது விவசாயி நேசம்; 10 தென்னை மரம் மறுநடவு

Added : அக் 01, 2021
Share
Advertisement
பல்லடம் : பல்லடம் அருகே பத்து தென்னை மரங்கள் பெயர்த்து எடுக்கப்பட்டு மறுநடவு செய்யப்பட்டன.பல்லடம் அருகே கணபதிபாளையம் ஊராட்சி மலையம்பாளையம் பிரிவை சேர்ந்தவர் நாகரத்தினம், 40; விவசாயி. இவர் தனக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலத்தில் தென்னை பயிரிட்டுள்ளார். அவற்றில் பத்து தென்னை மரங்கள் நேற்று வேருடன் பெயர்த்து எடுக்கப்பட்டு மாற்று இடத்தில் நடப்பட்டன.இது குறித்து அவர்

பல்லடம் : பல்லடம் அருகே பத்து தென்னை மரங்கள் பெயர்த்து எடுக்கப்பட்டு மறுநடவு செய்யப்பட்டன.

பல்லடம் அருகே கணபதிபாளையம் ஊராட்சி மலையம்பாளையம் பிரிவை சேர்ந்தவர் நாகரத்தினம், 40; விவசாயி. இவர் தனக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலத்தில் தென்னை பயிரிட்டுள்ளார். அவற்றில் பத்து தென்னை மரங்கள் நேற்று வேருடன் பெயர்த்து எடுக்கப்பட்டு மாற்று இடத்தில் நடப்பட்டன.

இது குறித்து அவர் கூறுகையில், 'ஒரு சில தென்னை மரங்கள் வீட்டின் அருகிலும், மேலும் சில, வழித்தடத்திலும் இருப்பதால் இடையூறு ஏற்பட்டு வந்தது. அதனால், மாற்று இடத்தில் நடவு செய்ய தீர்மானித்தோம். சுல்தான்பேட்டையை சேர்ந்த ஜே.சி.பி., உரிமையாளர் கனகராஜ் என்பவர், இப்பணியை செய்து வருவதாக அறிந்தோம். அவரது முயற்சியால், பத்து தென்னை மரங்கள் வேறு இடத்தில் நடவு செய்யும் பணி நடந்தது,'' என்றார்.

கனகராஜ் கூறுகையில், ''ஏராளமான மரங்களை மறுநடவு செய்துள்ளோம். இதற்காக ஐந்து அடி ஆழத்தில் குழி தோண்டி, அதற்குள், முளைகட்டிய கம்பு, ராகி, தட்டைப்பயறு, சுண்டல் போடப்படும். இதனால், வேர்களுக்கு ஊட்டச்சத்து கிடைத்து நன்கு வளரும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X