மாநகர போலீசார் விரைவில் இடமாற்றம்; பட்டியல் தயாரிப்பு பணி மும்முரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாநகர போலீசார் விரைவில் இடமாற்றம்; பட்டியல் தயாரிப்பு பணி மும்முரம்

Added : அக் 01, 2021
Share
திருப்பூர் : திருப்பூர் மாநகரில், மூன்று ஆண்டுகளாக,ஒரே ஸ்டேஷனில் பணியாற்றி வரும், இரண்டாம் கட்ட போலீசாரின் பட்டியல் தயார் செய்யப்பட்டு, 217 போலீசாரிடம் இடமாறுதலுக்கான விருப்ப மனு பெறப்பட்டது.திருப்பூர் மாநகர போலீசில், சட்டம் - ஒழுங்கு, குற்றப்பிரிவு, மகளிர், போக்குவரத்து, மத்திய குற்றப்பிரிவு, குற்ற ஆவண காப்பகம் பிரிவு ஆகிய ஸ்டேஷன்களில், மூன்று ஆண்டுகளுக்கு மேல்

திருப்பூர் : திருப்பூர் மாநகரில், மூன்று ஆண்டுகளாக,ஒரே ஸ்டேஷனில் பணியாற்றி வரும், இரண்டாம் கட்ட போலீசாரின் பட்டியல் தயார் செய்யப்பட்டு, 217 போலீசாரிடம் இடமாறுதலுக்கான விருப்ப மனு பெறப்பட்டது.

திருப்பூர் மாநகர போலீசில், சட்டம் - ஒழுங்கு, குற்றப்பிரிவு, மகளிர், போக்குவரத்து, மத்திய குற்றப்பிரிவு, குற்ற ஆவண காப்பகம் பிரிவு ஆகிய ஸ்டேஷன்களில், மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் போலீசாரின் விவரம் அடங்கிய பட்டியல் போலீஸ் கமிஷனர் வனிதா அறிவுறுத்தலின் பேரில் தயார் செய்யப்பட்டது.

கடந்த, இரு வாரத்துக்கு முன், மாநகர ஸ்டேஷன்களில், மூன்று ஆண்டுகளை கடந்து பணியாற்றும், 83 போலீசார் அடங்கிய முதல் கட்ட பட்டியல் தயார் செய்து, அவர்களிடம் இருந்து இடமாறுதல் தொடர்பாக விருப்ப மனு பெறப்பட்டது.2ம் கட்ட பட்டியல்இந்த சூழலில், நேற்று முன்தினம், மூன்று ஆண்டுகள் பணி நிறைவு செய்தவர்கள் மற்றும் செய்ய உள்ளவர்கள் என, 217 போலீசார் அடங்கிய பட்டியல் தயார் செய்யப்பட்டு, உதவி கமிஷனர் அலுவலகம், அந்தந்த ஸ்டேஷன்களுக்கு அனுப்பப்பட்டது.

சம்பந்தப்பட்ட போலீசாரிடம், மூன்று விருப்ப பணியிடங்கள் குறிப்பிட்ட தங்களது விருப்ப மனுவை கமிஷனர் அலுவலகம், ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரிடம் வழங்க அறிவுறுத்தப்பட்டது.

பட்டியல் தயாரிப்பு

இதற்காக நேற்று பொது இடமாறுதலுக்கான விருப்ப மனுவை போலீசார் வழங்கி உள்ளனர். இடமாறுதல் தொடர்பாக, 300 போலீசாரிடம் இருந்து பெறப்பட்ட விருப்ப மனுக்களை அடிப்படையாக வைத்து, இடமாற்றம் தொடர்பாக பட்டியல் தயாரிக்கும் பணி மும்முரமாக கமிஷனர் அலுவலகத்தில் நடந்து வருகிறது. எனவே, மாநகர போலீஸ் ஸ்டேஷன்களில் பொது இடமாற்றம் விரைவில் நடக்க உள்ளது.

மூன்று ஆண்டுகள் பணி நிறைவுசெய்தவர்கள் மற்றும் செய்ய உள்ளவர்கள் என, 217 போலீசார் அடங்கிய பட்டியல் தயார் செய்யப்பட்டு, உதவி கமிஷனர் அலுவலகம், அந்தந்தஸ்டேஷன்களுக்கு அனுப்பப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X