சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலி ஆவண வழக்கு; மேலும், ஒருவர் கைது

Added : அக் 01, 2021
Share
Advertisement
திருப்பூர் : விபத்து வழக்குக்காக கோர்ட்டில் போலியாக ஆவணங்களை சமர்ப்பித்த வழக்கில், மேலும், ஒருவரை போலீசார் கைது செய்தனர்.வெள்ளகோவிலை சேர்ந்தவர் ராஜேந்திரன், 63; வக்கீல். இவர், 2015ம் ஆண்டில் செப்., - நவ., வரையிலான கால கட்டத்தில் நடந்த சில விபத்து வழக்குகளை கையாண்டார். அதற்காக, இன்சூரன்ஸ் தொடர்பான போலி ஆவணங்களை கோர்ட்டில் சமர்ப்பித்தார்.இதுகுறித்து அறிந்த தாராபுரம்

திருப்பூர் : விபத்து வழக்குக்காக கோர்ட்டில் போலியாக ஆவணங்களை சமர்ப்பித்த வழக்கில், மேலும், ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

வெள்ளகோவிலை சேர்ந்தவர் ராஜேந்திரன், 63; வக்கீல். இவர், 2015ம் ஆண்டில் செப்., - நவ., வரையிலான கால கட்டத்தில் நடந்த சில விபத்து வழக்குகளை கையாண்டார். அதற்காக, இன்சூரன்ஸ் தொடர்பான போலி ஆவணங்களை கோர்ட்டில் சமர்ப்பித்தார்.இதுகுறித்து அறிந்த தாராபுரம் சப்-கோர்ட் நீதிபதி தர்மபிரபு, எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார். அதன்பேரில், தாராபுரம் போலீசார் விசாரித்து, போலி ஆவணங்களை சமர்ப்பித்தது தொடர்பாக வக்கீல் ராஜேந்திரனை கைது செய்தனர். இதில், வக்கீலுக்கு உடந்தையாக இருந்த, திண்டுக்கல்லை சேர்ந்த முகமது அலி, 55 என்பவரை தாராபுரம் போலீசார் நேற்று கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X