பொது செய்தி

தமிழ்நாடு

சிறப்பு முகாம் பணி புறக்கணிப்பு; வருவாய்த்துறை சங்கம் அறிவிப்பு

Added : அக் 01, 2021
Share
Advertisement
திருப்பூர் : கொரோனா தொற்றின் போது, வருவாய்த்துறை அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர் என, 40 பேர் பலியாகியுள்ளனர். இறந்தவர்களில், 12 பேருக்கு மட்டும் நிவாரணம் கிடைத்துள்ளது. மற்றவர் குடும்பங்களுக்கும், தலா, 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.கருணை அடிப்படையிலான பணிகளை, அரசாணைப்படி வரன்முறை செய்ய வேண்டும். மாவட்ட வருவாய் அலுவலர், துணை கலெக்டர் பதவி உயர்வு பட்டியலை

திருப்பூர் : கொரோனா தொற்றின் போது, வருவாய்த்துறை அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர் என, 40 பேர் பலியாகியுள்ளனர். இறந்தவர்களில், 12 பேருக்கு மட்டும் நிவாரணம் கிடைத்துள்ளது. மற்றவர் குடும்பங்களுக்கும், தலா, 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.

கருணை அடிப்படையிலான பணிகளை, அரசாணைப்படி வரன்முறை செய்ய வேண்டும். மாவட்ட வருவாய் அலுவலர், துணை கலெக்டர் பதவி உயர்வு பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும்.தேர்தல் செலவுகளுக்கு, நிதியை விடுவிக்க வேண்டும். அலுவலருக்கான மதிப்பூதியம், அரசு வாகனத்துக்கான பெட்ரோல் செலவு தொகை, வாடகை கார்களுக்கான கட்டண செலவுக்கு நிதி ஒதுக்க வேண்டும்.

நிதி ஒதுக்காதபட்சத்தில், அடுத்த மாதம் நடக்கும் வாக்காளர் சிறப்பு முகாம் பணியை புறக்கணிப்போம் ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.நேற்று மதியம், கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாநில செயற்குழு உறுப்பினர் தங்கவேல் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முருகதாஸ், கோரிக்கையை விளக்கி பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X