பொது செய்தி

தமிழ்நாடு

ஒரே  தவணையில் பங்களிப்பு தொகை; குடிசை மாற்று வாரியம் திட்டவட்டம்

Added : அக் 01, 2021
Share
Advertisement
திருப்பூர் : தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் சார்பில், மத்திய அரசு திட்டத்தில், அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. வீரபாண்டி, நெருப்பெரிச்சல், அவிநாசி பகுதிகளில் கட்டிய வீடுகளுக்கு, பயனாளிகள் தேர்வு பணி நடந்து வருகிறது.வீடு தேர்வு பெற்ற பயனாளிகளுக்கு, 10 சதவீத பங்களிப்பு தொகையை செலுத்த, கடிதம்அனுப்பும் பணி துவங்கியுள்ளது. தரைத்தளத்தில், 'டைல்ஸ்'

திருப்பூர் : தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் சார்பில், மத்திய அரசு திட்டத்தில், அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. வீரபாண்டி, நெருப்பெரிச்சல், அவிநாசி பகுதிகளில் கட்டிய வீடுகளுக்கு, பயனாளிகள் தேர்வு பணி நடந்து வருகிறது.

வீடு தேர்வு பெற்ற பயனாளிகளுக்கு, 10 சதவீத பங்களிப்பு தொகையை செலுத்த, கடிதம்அனுப்பும் பணி துவங்கியுள்ளது. தரைத்தளத்தில், 'டைல்ஸ்' பதிக்கப்பட்ட வீடுகளுக்கு, 1.50 லட்சம் ரூபாயும், சாதாரண சிமென்ட் தரை வீடுகளுக்கு, ஒரு லட்சத்து, 900 ஆயிரம் ரூபாயும் பங்களிப்பு செலுத்த வேண்டுமென, குடிசை மாற்று வாரியம் அறிவித்துள்ளது.இதுகுறித்து குடிசை மாற்று வாரிய அலுவலர்கள் கூறியதாவது:

குடிசை மாற்று வாரியம் என்ற பெயர் மாற்றப்பட்டு, புதிய பெயரில், 'டிடி' எடுக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடிதத்தில் குறிப்பிட்ட அளவுக்கு, ஒரே தவணையாக பங்களிப்பை செலுத்த வேண்டும். ஆனால், பல தவணையில் தொகை செலுத்தக்கூடாது.தவணை முறையில் செலுத்தினால், 'டிடி'யை பெற மாட்டோம். ஒருவர் பணம் செலுத்த தாமதம் செய்தால், அடுத்துள்ள தகுதியான நபரிடம், பங்களிப்பை பெற்று, வீடுகள் ஒதுக்கப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X