பொது செய்தி

தமிழ்நாடு

இரவில் தண்ணீர் திருட்டு; நடவடிக்கை எடுக்க மனு

Added : அக் 01, 2021
Share
Advertisement
பல்லடம் --: இரவில் நடக்கும் தண்ணீர் திருட்டு குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பி.ஏ.பி., பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பல்லடம் அருகே அல்லாளபுரத்தில் இருந்து வரும் பி.ஏ.பி., பிரதான வாய்க்காலில் இருந்து ஏராளமான கிளை வாய்க்கால் வழியே தண்ணீர் செல்கிறது. ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டபடி அவற்றுக்கு தண்ணீர் பிரித்து வழங்கப்படுகிறது.கடந்த சில தினங்களாக,

பல்லடம் --: இரவில் நடக்கும் தண்ணீர் திருட்டு குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பி.ஏ.பி., பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பல்லடம் அருகே அல்லாளபுரத்தில் இருந்து வரும் பி.ஏ.பி., பிரதான வாய்க்காலில் இருந்து ஏராளமான கிளை வாய்க்கால் வழியே தண்ணீர் செல்கிறது. ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டபடி அவற்றுக்கு தண்ணீர் பிரித்து வழங்கப்படுகிறது.கடந்த சில தினங்களாக, இரவு நேரங்களில் தண்ணீர் திருட்டு நடப்பதாக, அப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.இது குறித்து அவர்கள் கூறியதாவது:

இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை இப்பகுதி கிளை வாய்க்காலுக்கு தண்ணீர் பகிர்ந்தளிக்கப்படும். இருப்பை பொறுத்து தண்ணீர் வினியோகத்தில் மாற்றம் செய்யப்படும். வீரபாண்டி பிரிவு வரை செல்லும் இக்கிளை வாய்க்காலை நம்பி, நுாற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.இரண்டு நாட்களுக்கு முன் தண்ணீர் திறக்கப்பட்ட போது, இரவு நேரத்தில் சிலர் தண்ணீர் திருட்டில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, எங்களுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் வரவில்லை. பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டால், நாங்கள் இதில் தலையிட முடியாது. வி.ஏ.ஓ.,விடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்கின்றனர்.இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை தண்ணீர் கிடைத்து வரும் சூழலில், அதுவும் கிடைக்காமல் ஏமாற்றப்படுகிறோம். எனவே, தண்ணீர் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, விவசாயிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X