அரசியல் செய்தி

தமிழ்நாடு

கோவில் நகைகளை உருக்கி வங்கிகளில் முதலீடு செய்யும் திட்டத்திற்கு பா.ஜ., எதிர்ப்பு

Updated : அக் 01, 2021 | Added : அக் 01, 2021 | கருத்துகள் (85)
Share
Advertisement
சென்னை: 'கோவில் தங்க நகைகளை உருக்கி, வங்கிகளில் முதலீடு செய்து, அதில் கிடைக்கும் வட்டியை செலவு செய்வோம் என்பது சட்ட விரோதமானது' என்று தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: பக்தர்கள் கோவிலுக்கு செலுத்தும் தங்க காணிக்கைகளை உருக்கி, அதை வங்கிகளில் தங்க பத்திரங்களாக மாற்றி, அதிலிருந்து கிடைக்கும் வட்டியை, மற்ற கோவில்கள்
BJP, Temple Jewels, DMK

சென்னை: 'கோவில் தங்க நகைகளை உருக்கி, வங்கிகளில் முதலீடு செய்து, அதில் கிடைக்கும் வட்டியை செலவு செய்வோம் என்பது சட்ட விரோதமானது' என்று தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: பக்தர்கள் கோவிலுக்கு செலுத்தும் தங்க காணிக்கைகளை உருக்கி, அதை வங்கிகளில் தங்க பத்திரங்களாக மாற்றி, அதிலிருந்து கிடைக்கும் வட்டியை, மற்ற கோவில்கள் பராமரிப்புக்கு செலவு செய்வோம் என்பது சட்ட விரோதமானது. பக்தர்கள் தங்களின் வேண்டுதல் நிறைவேற செலுத்திய காணிக்கைகள், குறிப்பிட்ட கோவில் களின் முன்னேற்றத்திற்கு, நிர்வாகத்திற்கு பயன்பெற வேண்டும்.


latest tamil news



அந்த வளத்தை பயன்படுத்தி, மற்ற கோவில்களுக்கு செலவு செய்வதற்கு, அரசுக்கு, அறநிலையத் துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை.கோவில்களுக்குஅறநிலையத்துறை தான் சொந்தக்காரர் என்பது போல, தி.மு.க.,அரசு செயல்படுவது, நம்பிக்கை துரோகம். உண்மையிலேயே அரசுக்கு, கோவில்கள் முன்னேற்றத்தில் அக்கறை இருந்தால், அரசின் வருமானத்தை பெருக்கி, அதை வைத்து செலவிட வேண்டும்.

திருப்பதி கோவிலில், இதுபோன்று செய்வதாக அமைச்சர் சேகர்பாபு சொல்லியிருப்பது, உண்மைக்கு புறம்பானது. இந்த அறமற்ற செயலை, தமிழக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (85)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
navasathishkumar - MADURAI,இந்தியா
08-அக்-202112:10:01 IST Report Abuse
navasathishkumar உருக்கி வைக்க வேண்டிய அவசியம் இல்லை ..ஆனால் அணைத்து நகைகளையும் வங்கிகளில் வைத்தால் நல்லது தான் ..நம்மிடம் சொத்து இருந்தும் அது எவளவு என்பது பொது மக்களுக்கு தெரியாது ...இப்படி அடமானம் வைத்தால் அது பரணில் உறங்காமல் பொது சேவைக்கு பயன் படும், எந்த சாமி தங்க நகையோடு வந்தது? எருக்கம் பூ, மல்லி, ரோசா தான் இவர்களின் ஆபரணம் ஆனால் மன்னர்கள் தங்கள் ஆசைக்கு பொற்கொல்லர்களை கூப்பிட்டு ஆபரணம் செய்ய சொல்ல இன்று நாட்டின் மிகப்பெரிய அசையா சொத்தாக மாறிவிட்டது தங்க நகைகள் .சான்றாக கடவுள்களிடம் இருக்கும் இந்த நகைகளை ஆடிட்டிங் செய்த பொது இராமேஸ்வரம் கோவில் நகைகளின் மதிப்பு குறைந்ததாக சொன்னார்கள் ஆனால் இது தேய்மானம் என்று சொல்லி இருக்கின்றார்கள் ..அந்த ஆய்வறிக்கை என்ன ஆயிற்று என்று தெரிய வில்லை ..நம்மை போன்ற பத்திரிகைகளும் விட்டு விட்டது ...சரி ஹிந்து கோவில்களில் அறத்தை எதிர்ப்பார்க்கும் அரசு ஹிந்து என்ற பெயரை எடுத்து விட்டு சமயம் மற்றும் ஆலய துறை என்று மாற்றி தமிழ் நாடு மட்டும் அல்ல இந்தியா முழுக்க கோவில் அசையும், அசையா சொத்துக்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும். இதற்க்கு பொது மக்கள் ஒத்துழைப்புதர வேண்டும் ..தனி வெப் சைடில் சொத்து விவரங்கள் வெளியிட்டு வந்தால் நம்பக தன்மை அதிகமாகும் .நம்மிடம் இருக்கும் ஆன்மீக சக்தி சுரண்ட இல்லை அந்நிய நாடுகள் பிரமிக்க வைக்கும் நிகழ்வாக இருக்கும் ..செய்வீர்களா?
Rate this:
Cancel
Mayavan Mayavan - Chennai,இந்தியா
01-அக்-202117:13:15 IST Report Abuse
Mayavan Mayavan முதலில் அறிவாலயத்தில் உள்ள சொத்துக்களை அடமானம் வைத்து தமிழகத்தை காப்பாற்றலாமே. எல்லாம் இங்கிருந்து எடுத்தது தானே.
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
01-அக்-202116:52:11 IST Report Abuse
vbs manian திருப்பதியை தவறாக உதாரணம் காட்டுகிறார்கள். திருப்பதி தேவசத்தான ஆதரவில் வெங்கடேஸ்வரா பல்கலை இயங்குகிறது. பல ஏழை கோவில்களுக்கு உதவி செயகிறார்கள். இன்னும் பல நல்ல காரியங்கள் நடைபெறுகின்றன. ஆனால் இவையெல்லாம் நகைகளை உருக்கி பிசிசுட்டாக மாற்றி வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டு நடப்பதில்லை. அங்கு உண்டியலில் விழும் பணத்தை கொண்டு செய்யப்படுகின்றது. ஒரு நாளைக்கு கொடிகள் உண்டியலில் விழுகின்றன. நகையை தொடவில்லை. திரும்ப திரும்ப இவர்கள் ஏன் நகைகளை குரி வைக்கிறார்கள். இதே யோசனை முன்னாள் ரேசெர்வ பேங்க் கோவெர்னருக்கும் வந்தது. சர்ச் மசூதியில் ஏன் கை வைக்கவில்லை என்று பலத்த எதிர்ப்பு கிளம்பியது. விட்டு விட்டார்கள். கழகத்தை நிச்சயம் நம்ப முடியாது. உருக்கு முன் ஒரு கணக்கு. உருக்கிய பின் ஒரு கணக்கு. நடுவில் சேதாரம் அடித்து கொண்டு போய் விடும்.
Rate this:
01-அக்-202121:54:00 IST Report Abuse
Vittalanandஉருக்காமல் அப்படியே அடமானம் வைக்க மாட்டார்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X