பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளிகளை தயார்படுத்துங்க அலுவலர்களுக்கு அறிவுரை

Added : அக் 01, 2021
Share
Advertisement
கோவை : ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, நவ., 1ல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடு குறித்த கூட்டம், ஒண்டிப்புதுார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.அதில், முதன்மை கல்வி அலுவலர் கீதா கூறுகையில்,''பள்ளிகள் திறக்க ஒரு மாதம் இடைவெளி இருக்கிறது. துாய்மை சார்ந்த பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க

கோவை : ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, நவ., 1ல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடு குறித்த கூட்டம், ஒண்டிப்புதுார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.

அதில், முதன்மை கல்வி அலுவலர் கீதா கூறுகையில்,''பள்ளிகள் திறக்க ஒரு மாதம் இடைவெளி இருக்கிறது. துாய்மை சார்ந்த பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதிக மாணவர்கள் படிக்கும் பள்ளிகள், சுழற்சி முறையில் மட்டுமே செயல்பட வேண்டும். ஒரு வகுப்புக்கு, 20 மாணவர்களை மட்டுமே அமர வைத்தல், சமூக இடைவெளி பின்பற்றுவது உளளிட்ட, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

பெற்றோரை தொடர்புகொண்டு, தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்த வேண்டும். இதன் மூலம், குழந்தைகளுக்கு தொற்று பரவாமல், தற்காத்துக் கொள்ள முடியும்,'' என்றார்.மாவட்ட கல்வி அலுவலர்கள், ஒருங்கிணைந்த கல்வி உதவி திட்ட அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X