பொது செய்தி

தமிழ்நாடு

அக்., 4 முதல் டிச., 31 வரை தீவிர குடும்ப நல முகாம்!

Added : அக் 01, 2021
Share
Advertisement
கோவை, : கோவையில், வரும் அக்.,4ம் முதல் டிச.,31ம் தேதி வரை தீவிர குடும்ப நல முகாம் நடக்கிறது.இன்றைய சூழலில் முதல் குழந்தை பெற்றவர்கள், அடுத்த குழந்தைக்கு சில ஆண்டுகள் இடைவெளி விடுவதில்லை. இரு குழந்தை உள்ளவர்கள் குடும்பக்கட்டுப்பாடு செய்து கொள்வதில்லை. குடும்ப நல விதிமுறைகளை அனுசரிக்காமல் உள்ளனர். எனவே, குடும்ப நல கருத்தடைப்பு நடவடிக்கையை தீவிரமாக நடைமுறைப்படுத்த, சென்னை

கோவை, : கோவையில், வரும் அக்.,4ம் முதல் டிச.,31ம் தேதி வரை தீவிர குடும்ப நல முகாம் நடக்கிறது.

இன்றைய சூழலில் முதல் குழந்தை பெற்றவர்கள், அடுத்த குழந்தைக்கு சில ஆண்டுகள் இடைவெளி விடுவதில்லை. இரு குழந்தை உள்ளவர்கள் குடும்பக்கட்டுப்பாடு செய்து கொள்வதில்லை. குடும்ப நல விதிமுறைகளை அனுசரிக்காமல் உள்ளனர். எனவே, குடும்ப நல கருத்தடைப்பு நடவடிக்கையை தீவிரமாக நடைமுறைப்படுத்த, சென்னை குடும்ப நல இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, கோவையில், அக்.,4 டிச.,31 வரை தீவிர குடும்ப நல முகாம் நடத்தப்படுகிறது.

மாவட்ட குடும்ப நல துணை இயக்குனர் கவுரி கூறியதாவது;குடும்ப நலத்திட்டம் என்பது தாய் சேய் நலத்தை அடிப்படையாகக் கொண்டது. தாய் சேய் நலம் குறைந்தால் வீட்டில் மகிழ்ச்சி குறையும்; பொருளாதார நெருக்கடி வரும். சமுதாயம், நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும்.அதிக குழந்தைகளை பெற்று சிரமப்படாமல், குடும்ப நல திட்ட முறைகளை அனுசரித்து, பிறந்த குழந்தையை பாதுகாத்து, பிறக்கப் போவதை தடுத்து, வாழ்க்கை தரத்தை மேம்படுத்திக் கொள்ள குடும்ப நலம் சிறந்த திட்டம்.

அவசர கால கருத்தடை மாத்திரைகள், ஆணுறை, பாதுகாப்பான உடலுறவு, கருத்தடை வளையம், பெண்களுக்கான நவீன வாய்வழி கருத்தடை மாத்திரை, கருத்தடை ஊசி உள்ளிட்டவை குடும்ப நல தற்காலிக முறை. நவீன கருக்கலைப்பு, நவீன கருக்கலைப்பு மாத்திரை ஆகியவை, குடும்ப நல நிரந்தர முறைகள். இவற்றை பற்றி, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.இவ்வாறு, கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X